Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

25 வயது பெண்ணை 139 பேர் செய்த கொடூரம் : 42 பக்க FIR – ருடன் வெளிவந்த தகவல்

25 வயது பெண்ணை 139 பேர் செய்த கொடூரம் : 42 பக்க FIR – ருடன் வெளிவந்த தகவல்

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் பகுதியை சேர்ந்த 25 வயதுடைய பெண் ஒருவர் தன்னை 139 நபர்கள் பாலியல் கொடுமை செய்ததாக புகார் கொடுத்துள்ளார்.புகாரில் மாணவர்கள், அரசியல்வாதிகள் ,வழக்கறிஞர்கள், தொழிலதிபர்கள் ஆகியவர்கள் உள்ளிட்ட பல பேரின் பெயர்களை குறிப்பிட்டு உள்ளார். இந்த புகாரானது ஹைதராபாத்தில் உள்ள பஞ்சாகுட்ட காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

2010 ஆம் ஆண்டு திருமணமான இந்த பெண் , ஒரு வருடத்தில் விவாகரத்து செய்துள்ளார்.இவர் அளித்த புகாரில் விவகாரத்து பெற்றுள்ள தனது கணவரின் குடும்பத்தில் உள்ள  சிலர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகாரில் தெரிவித்துள்ளார்.

கணவரிடமிருந்து விவாகரத்து பெற்று பின் இந்த பெண் படிப்பதற்காக சென்ற இடத்தில் பலர் இவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், பாலியல் சீண்டல்களை வெளியே கூறக்கூடாது என பலர் மிரட்டி உள்ளதாகவும் காவல் நிலையத்தில் தெரிவித்தார்.

இது போன்ற அதிகமான பாலியல் தொந்தரவை சந்தித்த அப்பெண்ணின் வாக்குமூலத்தில் 42 பக்கம் FIR புகாரை கொடுத்தது, ஹைதராபாத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்தப் பெண் கூறிய 139 பேரின் பெயர்கள் தற்போது விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் இந்த வழக்கு பற்றிய விசாரணை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version