பெண்ணின் வீட்டுக் கதவை தட்டியதாக வாலிபர் மீது தாக்குதல்!! அவமானத்தில் வாலிபர் செய்த செயல்!!

0
117

பெண்ணின் வீட்டுக் கதவை தட்டியதாக வாலிபர் மீது தாக்குதல்!! அவமானத்தில் வாலிபர் செய்த செயல்!!

அன்னூர் அருகே வீட்டுக் கதவை தட்டியதாக வாலிபர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து அவமானம் தாங்கமுடியாத அந்த வாலிபர் விபரீதமான முடிவை எடுத்துள்ளார். அந்த வாலிபரின் விபரீத முடிவு அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியாள்ளது.

 

தேனி போடிநாயக்கனூரை சேர்ந்த சுப்பிரமணி என்பவருடைய மகன் பாரதி கணேஷ் என்பவர் கோவை பிள்ளையார் பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த 6 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். வேலைக்காக அன்னூர்-மேட்டுப்பாளையம் சாலை பகுதியில் திண்டுக்கல்லை சேர்ந்த சிவா என்பவருடன் வீடு எடுத்து தங்கி வந்தார். பாரதி கணேஷ் இருக்கும் வீட்டின் கீழ் தளத்தில் இளம்பெண் ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.

 

நேற்று(ஆகஸ்ட்18) காலை அந்த இளம்பெண் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் 11 மணியளவில் இளம்பெண் இருந்த வீட்டின் கதவை யாரோ தட்டியுள்ளார். இளம்பெண் வெளியே வந்து பார்த்த பொழுது அந்த இடத்தில் யாரும் இல்லை. இதையடுத்து இளம்பெணின் பெற்றோர்கள் வந்த பிறகு யாரோ ஒருவர் வீட்டின் கதவை தட்டியதாகவும் மேல் தளத்தில் வசிக்கும் பாரதிகணேஷ் மீது சந்தேகம் இருப்பதாகவும் அந்த இளம்பெண் கூறினார்.

 

இதையடுத்து ஆத்திரம் அடைந்த இளம்பெண்ணின் பெற்றோர் பாரதிகணேஷ் அவர்களின் மோட்டார் சைக்கிளை வீட்டுக்குள் மறைத்து வைத்தனர். பின்னர் வேலைக்கு செல்வதற்காக வெளியே வந்த பாரதி கணேஷ் அவர்கள் மோட்டார் சைக்கிளை காணாததால் அங்கும் இங்கும் தேடியுள்ளார். பின்னர் இளம்பெண்ணின் வீட்டுக்குள் மோட்டர் சைக்கிள் நிற்பதை பார்த்த பாரதி கணேஷ் அவர்கள் இளம்பெண்ணின் வீட்டுக்குள் சென்று மோட்டார் சைக்கிளை தருமாறு கேட்டுள்ளார்.

 

அப்போது இளம்பெண்ணின் பெற்றோர் மற்றும் அண்ணன் ஆகியோர் சேர்ந்து கதவை எதற்கு தட்டினாய் என்று பாரதி கணேஷ் அவர்களிடம் கேட்டனர். இதையடுத்து பாரதி கணேஷ் அவர்கள் தட்டவில்லை என்று கூறியுள்ளார். இதையடுத்து அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட இளம்பெண்ணின் பெற்றோர் மற்றும் அண்ணன் ஆகியோர் சேர்ந்து பாரதி கணேஷ் அவர்களை கட்டையால் தாக்கினார்.

 

பின்னர் இதுகுறித்து காவல் நிலையத்தால் புகார் அளித்த பாரதி கணேஷ் அவர்கள் வீட்டுக்கு திரும்பி வந்தார். இளம்பெண்ணின் பெற்றோர்கள் தாக்குதல் நடத்தியத்தில் செய்யாத தவறுக்கு மன உளைச்சலில் இருந்த பாரதி கணேஷ் அவர்கள் அவமானம் தாங்க முடியாமல் மாடிப்படி இறங்கும் இடத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 

பாரதி கணேஷ் தற்கொலை செய்து கொண்டதை அறிந்த திண்டுக்கல்லை சேர்ந்த சிவா இது குறித்து அன்னூர் காவல் நிலையத்திற்கு புகார் அளித்தார். தகவல் அறாந்து வந்த காவல் துறையினர் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி பாரதி கணேஷ் அவர்களுடைய சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்து அன்னூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.