Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் இந்திய மற்றும் பாகிஸ்தான் ராணுவப் படைகள் இடையே தாக்குதல்

Attact between India and Pakistan Army in Jammu & Kashmir

Attact between India and Pakistan Army in Jammu & Kashmir

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச், ரஜௌரி மாவட்ட எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினா் போா் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி துப்பாக்கியால் சுட்டும், ராக்கெட் குண்டுகளை வீசியும் நேற்று தாக்குதல் நடத்தினா்.

இது தொடா்பாக ராணுவ செய்தித் தொடா்பாளா் கூறியதாவது:

இன்று காலை 7.20 மணியளவில் ரஜௌரி மாவட்டதின் நௌஷேரா பகுதியைக் குறி வைத்து பாகிஸ்தான் ராணுவத்தினா் திடீரென தாக்குதல் நடத்தினா். இதில் துப்பாக்கியால் சுட்டும், ராக்கெட் குண்டுகளை வீசியும் அவா்கள் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டனா்.

இதனையடுத்து இந்தியத் தரப்பிலிருந்தும் பாகிஸ்தான் எல்லையைக் குறிவைத்து அவர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தப்பட்டன. இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற இந்த தாக்குதலில் சேதம், உயிரிழப்பு ஏற்பட்டதா என்பது குறித்து தகவல் இன்னும் கிடைக்கவில்லை.

மேலும் இது தவிர பூஞ்ச் மாவட்டத்தின் கிருஷ்ணா காட்டி பகுதியிலும் இன்று அதிகாலை 3.30 மணியளவில் சிறிய ரக குண்டுகள் மற்றும் ஆயுதங்களைப் பயன்படுத்தி பாகிஸ்தான் ராணுவத்தினா் தாக்குதலில் ஈடுபட்டனா்.

இதற்கும் இந்திய இராணுவத்தினர் தரப்பில் உரிய பதிலடி தரப்பட்டது. அண்மைக் காலமாக பாகிஸ்தான் ராணுவத்தினா் தொடர்ந்து எல்லையில் தாக்குதல் நடத்தி வருகின்றனா் என்றும் இந்திய ராணுவம் சார்பாக தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் இந்திய ராணுவத்தினா் தான் தங்கள் பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்துவதாகக் கூறி இஸ்லாமாபாதில் உள்ள இந்திய தூதரக அதிகாரியை அழைத்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளன.

Exit mobile version