Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆத்தாடி இதே வேலையா தான் இருக்காங்களோ! உஷாரா இருங்க பொதுமக்களே!!

Attadi is the same job! Be careful public!!

Attadi is the same job! Be careful public!!

ஆத்தாடி இதே வேலையா தான் இருக்காங்களோ! உஷாரா இருங்க பொதுமக்களே!!

சென்னையில் இதுவரை 767 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மண்டல வாரியான எண்ணிக்கையை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக சென்னையில் மட்டும் அதிவேகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.தொற்று பரவலை கட்டுப்படுத்த மாநகராட்சி பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன் ஒருபகுதியாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அனைவரும் முககவசம் அணிவது கட்டாயம் என்றும் மீறுபவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்து இருந்தது. இதன்படி முகக்கவசம் அணியாத நபர்களிடமிருந்து அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த 7 நாட்களில் முகக்கவசம் அணியாத 2,340 நபர்களிடம் இருந்து ரூ.11.70 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் முக கவசம் கட்டாயம் அணியுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Exit mobile version