Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பாலிவுட் நடிகர் சல்மான் கான்க்கு கொலை முயற்சி!! 22 வருடம் கழித்தும் தீராத  பழி உணர்வு??

பாலிவுட் பிரபல நடிகர் சல்மான் கான் 22 வருடங்களுக்கு முன்பு மான்களை வேட்டையாடிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு பின்பு  விடுவிக்கப்பட்டார்.

22 வருடங்களுக்கு முன்பு பாலிவுட் பிரபலம் சல்மான் கான் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இரண்டு மான்களை வேட்டையாடி அதற்காக அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கில் மான்களை தெய்வமாக வழிபடும் பிஷ்னோய் சமூகத்தை சேர்ந்தவர்கள் கோபமடைந்து அதில் ஒருவர் தற்போது சல்மான்கானை கொலை செய்யும் எண்ணத்தில் அவரது பண்ணை வீட்டை நோட்டமிட்டு வருவதாக தகவல்கள் போலீசாருக்கு தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட லரான்ஸ் பிஷ்னோய் கும்பலை சேர்ந்த சம்பந்த நெஹ்ரா என்பவரும் சல்மான் கானை கொலை செய்ய திட்டமிட்டதாக போலீஸாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

22 வருடத்திற்கு முன்பு நடந்த  ஒரு சம்பவத்திற்காக பழிவாங்கத் துடிக்கும் பிஷ்னோய் சமூகத்தினரின் கோபத்தை நினைத்து பலரும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். 

Exit mobile version