Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

10-ஆம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு !.. துணைத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் இன்று முதல் வெளியீடு!!

Attention 10th Class Students !.. Hall Ticket for Supplementary Examination Released from Today!!

Attention 10th Class Students !.. Hall Ticket for Supplementary Examination Released from Today!!

10-ஆம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு !.. துணைத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் இன்று முதல் வெளியீடு!!

தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது பொதுத்தேர்வின் முடிவுகள் கடந்த வாரம் பள்ளி கல்வித்துறை வெளியிட்டது. இதில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 90.7 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.

அதைத்தொடர்ந்து மாணவர்களை விட ஒன்பது சதவீதம் அதிகமாக மாணவிகளை தேர்ச்சி அடைந்தனர். பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் 47000 மாணவர்களும் கணித பாடத்தில் 83 ஆயிரம் மாணவர்களும் தேர்ச்சி பெறவில்லை.

பத்தாம் வகுப்பு தமிழ் பொது தேர்வில் தமிழ் பாடத்தை எழுதிய 5.16 சதவீதம் பேர் தேர்ச்சி பெறாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு துணைத் தேர்வு ஜூலை 25ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றது .

பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு ஆகஸ்ட் 2 ஆம் முதல் எட்டாம் தேதி வரை நடைபெறயுள்ளது.அதன்படி பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை இன்று வெள்ளிக்கிழமை காலை  முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று கல்வி தேர்வு துறை அறிவித்துள்ளது.

மேலும் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று தங்கள் விவரங்களை பதிவிட்டு ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வுத்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Exit mobile version