சபரி மலை வருடாந்திர மண்டல பூஜை அடுத்த மாதம் தொடங்க உள்ளது. கோவிலுக்கு செல்ல விரும்பும் பக்தர்கள், தரிசனம் மற்றும் பிரசாதம் வாங்க இணையத்தில் முன் பதிவு செய்து அதற்கான டிக்கட்டுகள் பெற வேண்டு. ஆதே சமயம் முன் பதிவு செய்யாதவர்கள். சபரிமலைக்கு சென்ற பின் தேவசம் வாரியம் சார்பில் குறிப்பட்ட இடங்களில் செயல்படும் மையங்களில் தரிசன டிக்கெட் (ஸ்பார்ட் புக்கிங் ) செய்து கொள்ளலாம்.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கேரள தேவசம் வாரிய அமைச்சர் வி . என் . வாசன் தெரிவித்த அறிக்கையில் இந்த ஆண்டு நேரில் தரிசன டிக்கெட்டுகள்( ஸ்பார்ட் புக்கிங் முறையில் ) வழங்கப்படாது. மேலும் இணணய வழியில் மட்டுமே தரிசனம் மற்றும் பிரசாத டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். இவரது அறிவிப்புக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்த நிலையில் ஸ்பார்ட் புக்கிங் முறையை மீண்டும் கேரள அரசு நடைமுறை படுத்தவில்லை என்றால் போராட்டம் நடத்துவோம் என்ற எச்சரிக்கை பாஜக விடுத்திருந்தது. ஸ்பார்ட் புக்கிங் முறையை தொடர வேண்டும் என காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் மற்றும் ஆளும் இடது சாரி முன்னணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தி இருந்தது.
நேற்று கேரளா சட்டப்பேரவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் வி .ஜாய் எழுப்பிய கேள்விக்கு, முதல்வர் பினராயி விஜயன் திருப்பதி உள்ளிட்ட கோவில்களில் ஆன்லைன் முன்பதிவு முறை சிறப்பாக செயல்பட்டு வருவதை சுட்டிக்காட்டினார். அந்த வகையில் சபரி மலை ஐயப்பன் கோவிலுக்கான இணைய வழி தரிசன முன்பதிவு முறை கடந்த 2011 ஆம் வருடம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த நடைமுறையை மேலும் வலுப்படுத்துவதே அரசன் நோக்கம் என கூறினர். ஆன்லைன் புக்கிங் முறை மூலமாக ஐயப்ப பக்தர்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படும், மேலும் பக்கர்களின் முழு விவரத்தினை பெற உதவியாக இருக்கும் எனக் கூறினர். இருப்பினும் ஸ்பார்ட் புக்கிங் முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்பது பற்றி தகவல் எதுவும் கூரவில்லை.