Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

டுவிட்டரில் ப்ளூ டிக் கணக்கு வைத்திருப்பவர்களின் கவனத்திற்கு! மாதந்தோறும் வசூல் செய்யும் கட்டணத்தில் அதிரடி உயர்வு!

Attention Blue Dick account holders on Twitter! Dramatic increase in monthly collection fees!

Attention Blue Dick account holders on Twitter! Dramatic increase in monthly collection fees!

டுவிட்டரில் ப்ளூ டிக் கணக்கு வைத்திருப்பவர்களின் கவனத்திற்கு! மாதந்தோறும் வசூல் செய்யும் கட்டணத்தில் அதிரடி உயர்வு!

உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க் என்பவர் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ளார்.மேலும் அவர் அந்த நிறுவனத்தை விலைக்கு வாங்கிய உடனே தலைமை நிர்வாக அதிகாரியான  பராக் அகர்வால் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை எலான் மஸ்க் அதிரடியாக நீக்கினார்.அதனையடுத்து டுவிட்டரில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்துள்ளார்.

மேலும் அடுத்த மூன்று ஆண்டுகளில் டுவிட்டரின் வருவாயை இரட்டிப்பாக்க முயற்சி எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும் டுவிட்டரில் தற்போது 7500 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.அந்த எண்ணிக்கை ஆள்குறைப்பு நடவடிக்கையின் மூலம் இரண்டாயிரமாக குறைக்கப்படும்.

இந்நிலையில் ப்ளூ டிக் கணக்குகளுக்கு மாதம் ரூ 400 வசூல் செய்யப்பட்டு வந்தது.தற்போது அதனை உயர்த்த எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளார்.பொதுவாக பிரபலமான நபர்கள் ,புகழ்பெற்றவர்கள் உள்ளிட்டோரின் டுவிட்டர் பக்கம் அவரவர்களின் அதிகாரபூர்வ பக்கம் என்பதனை உறுதி செய்துகொள்ளும் வகையில் ப்ளூ டிக் வசதி அமைத்துள்ளது. அந்த வசதியை பெறுவதற்கு தற்போது ரூ 400கட்டணம் செலுத்தி வரும் நிலையில் தற்போது அதனை ரூ 1600 ஆக உயர்த்த எலான் மாஸ்க் திட்டமிட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

Exit mobile version