Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பேருந்து பயணிகள் கவனத்திற்கு!! இடம் மாறும் பஸ் ஸ்டாப்கள்!! வேதனையில் மக்கள்!!

Attention bus passengers!! Relocating bus stops!! People in agony!!

Attention bus passengers!! Relocating bus stops!! People in agony!!

Chennai: சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த 100 -க்கும் மேற்பட்ட பஸ் ஸ்டாப்-களை இடம் மாற்ற மாநகர போக்குவரத்து கழகம், சென்னை மாநகராட்சியில் அறிக்கை கொடுத்துள்ளது.

போக்குவரத்து கழக அதிகாரிகள் எவ்வளவு தான் பல முயற்சிகள் எடுத்தாலும் சாலை விபத்தின் காரணம் மற்றும் வாகனத்தின் நெரிசல் காரணமாக பல அசம்பாவிதம் நடைபெறுகிறது. அதில் முக்கியமாக (TRAFFIC) என்பது மிகப்பெரிய பிரச்சனை. இந்த பிரச்சனையை தவிர்க்க மெட்ரோ ரயில் போன்ற சேவைகள் வழங்கியும் கூட தடுக்க முடியவில்லை.

இதனால்  சென்னையில் பேருந்து நிருந்தங்களை  மாற்ற முடிவு எடுத்துள்ளது. அதில் முக்கியமாக சென்னை அடுத்த அம்பத்தூர் பகுதியில் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் அருகே பல மணி நேரம் சிக்னலில் பேருந்துகள் காத்திருக்கும் நிலை இருப்பதால், நடந்து செல்லும் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் பலர் கஷ்டப்பட்டதால், அந்த சிக்னல் மூடபட்டு பாடி, நோக்கி செல்லும் வழியாக ஆவின் செல்ல வேண்டிய வாகனங்களும் சென்று ஒரு இடத்தில் U-TURN செய்து வரும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.

அது மட்டும் அல்லாமல் சென்னையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் இடங்களை ஆய்வு மேற்கொண்டு பேருந்து நிறுத்தங்களை மாற்றப் போகிறோம் என மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் சிக்னல் மற்றும் மேம்பாலங்கள் அருகே உள்ள பேருந்து நிறுத்தங்களை சுமார் 100 மீட்டர் அளவுக்கு தூரமாக அமைக்க மாநகர போக்குவரத்து கழகம் திட்டமிட்டு வருகிறது. இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் கட்டுப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது.

Exit mobile version