Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மத்திய அரசு ஊழியர்களின் கவனத்திற்கு! உயர் நீதிமன்றம் வெளியிட்ட மாஸ் அப்டேட்!

attention-central-government-employees-mass-update-issued-by-the-high-court

attention-central-government-employees-mass-update-issued-by-the-high-court

மத்திய அரசு ஊழியர்களின் கவனத்திற்கு! உயர் நீதிமன்றம் வெளியிட்ட மாஸ் அப்டேட்!

மத்திய அரசு ஊழியர்களுக்கு நீண்ட நாள் கோரிக்கையாக இருப்பது பழைய ஓய்வூதியம் வழங்கவேண்டும் என்பது தான்.ஒரு சில மாநில அரசுகள் இதனை செயல்படுத்தி வருகின்றது.தற்போது பழைய ஓய்வூதியம் ஒருபோதும் கொண்டுவரமுடியாது என கூறிய ராஜஸ்தான் அரசும் தற்போது பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியுள்ளது.

அதனை தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்கள் அரசிடம் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றது.வரும் 2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் வருகின்றது. அதனால் அதற்கு முன்பாகவே ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு மீண்டும் கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

எதிர்பார்த்ததை போலவே குறிப்பிட்ட சில அரசு ஊழியர்கள் மட்டும் மத்திய அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.மேலும் இது குறித்து உயர்நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.அந்தவகையில் மத்திய துணை ராணுவ படையில் உள்ளவர்களுக்கு பழைய ஓய்வூதியம் திட்டம் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில் திமுக தேர்தல் வாக்குறுதியாக பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்படும் என கூறியது.எதிர்பார்தப்படியே திமுக ஆட்சிக்கு வந்தது.இருப்பினும்  நிதி பிரச்சனையை காரணம் காட்டி இதுவரை பழைய ஓய்வு திட்டம் அமல்படுத்தவில்லை என பலரும் கூறி வருகின்றனர்.

Exit mobile version