திருப்பதிக்கு இந்த தேதிகளில் சாமி தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்களின் கவனத்திற்கு! தேவஸ்தானம் வெளியிட்ட தகவல்!
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக மக்கள் எந்த கோவிலிலும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. அந்த வகையில் திருப்பதியிலும் மக்களை சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படாமல் இருந்த நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்ததால் மக்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் கடந்த புரட்டாசி மாதம் அதிக அளவு மக்கள் வரத் தொடங்கியதால் திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பின் பேரில் மீண்டும் டைம் ஸ்லாட் டோக்கன் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
அதன் மூலம் யார் எந்த நேரத்தில் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டிருக்கும். அப்போது பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வரும்பொழுது கூட்ட நெரிசலை தவிர்க்கலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் வரத் தொடங்கியுள்ளனர். தற்போதும் கொரோனா பரவால் மீண்டும் எழுச்சி பெற தொடங்கியுள்ளதால் கோவிலில் நேரடியாக டிக்கெட் விநியோகம் செய்வது நிறுத்தப்பட்டது. அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் ரூ 300 டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வந்தது.
அந்த வகையில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய ஒரு சில மணி நேரத்திலேயே டிக்கெட் முழுவதும் முன்பதிவு ஆகிவிடும். அதனால் பக்தர்கள் அதிகம் சிரமத்திற்கு உள்ளாகினார்கள் முன்கூட்டியே தரிசனம் செய்ய டிக்கெட் குறித்து விவரங்கள் இணையதளத்தில் வெளியாகி இருப்பதை தேவஸ்தானம் அறிவித்தது. அந்த வகையில் ஜனவரி 12ஆம் தேதி முதல் பிப்ரவரி 28ஆம் தேதி வரை பக்தர்கள் வழிபடுவதற்கான 300 ரூபாய் தரிசன டிக்கெட் ஜனவரி ஒன்பதாம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தரிசன டிக்கெட்டை பக்தர்கள் tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.