சர்க்கரை நோயாளிகளின் கவனத்திற்கு! எச்சரிக்கை உங்களுக்கு இந்த பிரச்சனை வரக்கூடும்!

0
247
#image_title

சர்க்கரை நோயாளிகளின் கவனத்திற்கு! எச்சரிக்கை உங்களுக்கு இந்த பிரச்சனை வரக்கூடும்!

சர்க்கரை நோய் என்பது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு நார்மல் அளவைவிட அதிகமாக இருப்பதை சர்க்கரை நோய் என்று கூறுகிறோம்.சர்க்கரை நோயில் டைப் 1 டயாபடீஸ், டைப் 2 டயபடீஸ் என்று இரண்டு வகையாக கூறப்படுகிறது. இதில் பெரும்பாலான மக்களை பாதிக்கக் கூடிய சர்க்கரை நோய் என்றால் அது டைப் 2 டையபடீஸ்

இந்த சர்க்கரை நோயானது மாறிவரும் உணவு பழக்கம், மன அழுத்தம், அதிக உடல் எடை மற்றும் மரபு ரீதியான காரணங்களாலும் ஏற்படுகிறது. சர்க்கரை நோயால் பல வருடமாக அவதிப்படுபவர்கள் நாளடைவில் கண் பார்வை மங்குதல், நரம்பு மண்டலங்களில் பாதிப்பு, இருதய அடைப்பு, மூளைகளில் அடைப்பு ,சிறுநீரகப் பிரச்சினை ,என பல்வேறு ஆபத்தான நோய்களால் பாதிப்படைகின்றன.

பொதுவாக நம் உடலில் ரத்த நாளங்களில் வழியாகத்தான் உடல் முழுவதும் ரத்தம் செல்கிறது. ரத்த நாளங்களில் உள்ள ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகும் பொழுது அது ரத்த நாளங்களில் இன்ப்ளமேஷனை உண்டாக்குகிறது. இன்ப்ளமேசன் என்பது ரத்த நாளங்களில் ஏற்படும் ரணங்கள் ,காயங்கள் ,புண்கள் என சொல்லலாம்.

உடலில் வெளிப் பகுதியில் காயங்கள் எப்படி உண்டாகிறதோ அதுபோல சர்க்கரை அளவு அதிகரிக்கும் பொழுது ரத்த நாளங்களில் உட்பகுதியில் காயங்களை உண்டாக்கும். இந்த காயங்கள் தொடர்ச்சியாக உண்டாகும் பொழுது நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு. சர்க்கரை நோயாளிகளுக்கு கை,கால் நடுக்கம், நரம்புத் தளர்ச்சி, போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.

மேலும் இந்த சர்க்கரை நோயானது நம் உடலில் மெல்லிய நரம்புகள் உள்ள இடங்களை தான் முதலில் பாதிக்கும். அதாவது கண்களை பாதிக்கும் கண் பிரச்சினைகளான டயபடிக் ரெட்டினோபதி, கருவிழி பாதிப்புகள், குல்கோமா போன்ற கண் சார்ந்த பிரச்சினைகளை உண்டாக்கும்.

நம் உடலில் கோடிக்கணக்கான மில்லியன் நரம்புகளால் ஆன உறுப்புகளில் ஒன்று சிறுநீரகங்கள். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும் பொழுது சில நரம்புகளில் இருக்கக்கூடிய நெப்ரான்ஸ் என்று சொல்லக்கூடிய மெல்லிய நரம்புகளை செயலிழக்க செய்யும். சர்க்கரை நோயாளிகளுக்கு இது போன்ற பிரச்சனைகள் ஏற்பட காரணம் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பது தான். சர்க்கரை அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் பொழுதுதான் சர்க்கரை நோயாளிகளுக்கு இது போன்ற ஆபத்தான நோய்கள் வராமல் தடுக்க முடியும்.

நாம் சாப்பிடக்கூடிய அனைத்து உணவுகளுமே இனிப்பு சுவையுடையதாக இருக்கும். உணவில் உள்ள சர்க்கரை அளவை பொறுத்து சர்க்கரை நோயாளிகள் எந்த மாதிரியான உணவை எடுத்துக் கொள்ள கூடாது. என்றால் இனிப்பு சார்ந்த உணவுகள், மாவு சத்து அதிகம் உள்ள உணவுகள், உதாரணமாக கிழங்கு வகைகள், அரிசி ,கோதுமை, போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும். மேலும் வெள்ளை அரிசி ,உப்பு ,சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், துரித உணவுகள் என்று சொல்லக்கூடிய பாஸ் புட் போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும். உதாரணமாக பீட்சா ,பர்கர், குளிர்பானங்கள் போன்றவற்றை சர்க்கரை நோயாளிகள் எடுத்துக் கொள்ளக் கூடாது.