குடும்ப அட்டை தாரர்கள் கவனத்திற்கு! இனி இது இல்லாமல் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்!
கொரோனா தொற்று உருவாகி அதிக அளவு தாகம் கொண்ட போது ஊரடங்கு போடப்பட்டது. அப்பொழுது தமிழக அரசு, ரேஷன் அட்டை உள்ளவர்கள் அனைவருக்கும் பல சலுகைகளை அளித்தது. இது அனைத்தும் மக்களின் வாழ்வாதாரத்தை நடத்துவதற்காக கொடுக்கப்பட்டது.அதனையடுத்த சட்டமன்ற தேர்தல் நடைபெறும் பொழுது ஆட்சிக்கு வந்தால் பல திட்டங்களை செய்லபடுத்துவதாக கூறினர்.அவற்றில் ஒன்றுதான் பெண்களுக்கான மாத உதவித்தொகை. திமுக ஆட்சி வெற்றி பெற்றவுடன் ,பெண்களுக்கான மாத உதவித்தொகை பெற அதிகப்படியான புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்தனர். அதனையடுத்து கடந்த ஆண்டு தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தினார்.
மேலும் ரேஷன் பொருட்களை 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் வாங்க இயலாது என்றும் கூறினர். ரேஷன் பொருட்கள் வாங்க உள்ளவர்கள் கட்டாயம் விரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். இதுவே நாளடைவில் புகாராக எழுந்தது. ஏனென்றால் சர்வர் பிரச்சனையால் பல இடங்களில் கைரேகை பதிவு செய்யும் இயந்திரம் செயல்படவில்லை.அவ்வாறு இருக்கையில் பொருட்களை மக்களுக்கு வழங்க முடியவில்லை.மக்கள் பொருட்களை வாங்க முடியாமல் தவித்து வந்தனர்.அதனால் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, தெளிவின்மையால் விரல்ரேகை பயோமெட்ரிக் இயந்திரம் செயல்படாமல் போனாலும் மக்களுக்கு பொருள்களை வழங்க வேண்டும்.
பல தொழில்நுட்ப பிரச்சனைகளால் ஆதார் இணைப்பு பெற முடியாத சூழலில் வேறு ஏதேனும் முறைகளை பின்பற்றி ரேஷன் பொருட்களை மக்களுக்கு தர வேண்டும் என்று கூறினார். அதேபோல வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பதில் வேறு ஒருவர் வாங்க வந்தால் உடனடியாக அவர்களுக்கு பொருட்களை வழங்க வேண்டும். அதேபோல ரேஷன் கடைக்கு வருவோரிடம் காடை ஸ்கேன் செய்த விரல் ரேகை பதிவாகிறதா என்று சரி பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.