Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

குடும்ப அட்டைதாரர்களின் கவனத்திற்கு! புதிய அறிவிப்பை வெளியிட்டது அரசு!!

#image_title

குடும்ப அட்டைதாரர்களின் கவனத்திற்கு! புதிய அறிவிப்பை வெளியிட்டது அரசு!
குடும்ப அட்டைதாரர்களுக்கு புதிய வசதியை வழங்கும் விதமாக சிவில் சப்ளை துணைத் தலைவர் அவர்கள் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது ரேஷன் கடைகள் இயங்குகிறதா இல்லையா என்பதை நாம் SMS மூலமாக தெரிந்து கொள்ளும் புதியவசதியை அரசு அறிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களாக ரேஷன் கடைகளில் பல்வேறு மாற்றங்களை அரசு கொண்டுவந்துள்ளது. கேழ்வரகு வழங்கும் திட்டம், கியூஆர் கோடு ஸ்கேன், ரேஷன் கடைகளில் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் திட்டம் என்று புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. இந்நிலையில் ரேஷன் கடைகள் இயங்குகிறதா இல்லையா என்பதை தெரிந்து கொள்ள புதிய எண்ணை அரசு அறிவித்துள்ளது.
குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் குடும்ப அட்டை பதிவு செய்யப்பட்ட நம்பரில் இருந்து 9773904050 என்ற எண்ணிற்கு PDS 102 என்று எஸ்.எம்.எஸ் செய்தால் ரேஷன் கடைகள் இயங்குகிறதா இல்லையா என்பதை அறிந்து கொள்ளலாம் என்றும் அதே எண்ணிற்கு PDS 101 எஸ்.எம்.எஸ் செய்தால் ரேஷன் கடைகளில் என்னென்ன பொருட்கள் உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம் என்றும் சிவில் சப்ளை துணைத் தலைவர் சன்முகவேலு அவர்கள் கூறியுள்ளார்.
Exit mobile version