Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சேலம் மாவட்ட பயணங்களில் கவனத்திற்கு! இன்று இந்த பகுதியில் ரயில் சேவை ரத்து!

Information provided by Salem District Railway Division! Trains canceled for these areas only!

Information provided by Salem District Railway Division! Trains canceled for these areas only!

சேலம் மாவட்ட பயணங்களில் கவனத்திற்கு! இன்று இந்த பகுதியில் ரயில் சேவை ரத்து!

சேலம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெறுவதன் காரணமாக சேலத்தில்லிருந்து அரக்கோணம் செல்லும் ரயில்களும் அரக்கோணத்தில்லிருந்து சேலம் வரும் ரயில்களும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் சேலத்தில் இருந்து ஜோலார்பேட்டை இடையே ரயில் சேவை இன்று ஒரு நாள் மட்டும் ரத்து செய்யப்படுகிறது. அரக்கோணத்தில் இருந்து சேலம் செல்லும் ரயில் வண்டி எண் (16088) சேலத்தில்லிருந்து ஜோலார்பேட்டை க்கு இயக்கப்படாது என்றும் ரயில்வே துறை அறிவித்துள்ளது.

மேலும் ஜோலார்பேட்டையில் இருந்து அரக்கோணம் செல்லும் ரயில் மட்டும் இயக்கப்படும் எனவும் சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. அரக்கோணத்தில் இருந்து சேலம் செல்லும் ரயிலும் சேலத்தில் இருந்து அரக்கோணம் செல்லும் ரயிலும் இன்று ஒரு நாள் மட்டுமே ரத்து செய்யப்பட்டுள்ளது என சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது. நாளை  வழக்கம் போல  ரயில் சேவையானது  தொடங்கும் என்றும் சேலம் ரயில்வே கோட்டம்  தெரிவித்துள்ளது.

Exit mobile version