Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஐடி ஊழியர்களின் கவனத்திற்கு! இவ்வாறு நீங்கள் செய்தால் பணி நீக்கம் செய்யப்படும்!

ஐடி ஊழியர்களின் கவனத்திற்கு! இவ்வாறு நீங்கள் செய்தால் பணி நீக்கம் செய்யப்படும்!

தற்போது வளர்ந்து வரும் காலகட்டத்தில் அனைவரும் ஒரு பணியில் மட்டும் ஈடுபடாமல் பகுதிநேர வேலையிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஐடி நிறுவனத்தில் ஓய்வு நேரத்தில் பல்வேறு நிறுவனங்களுக்கு பகுதி நேர வேலைக்கு செல்கின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக அனைத்து நிறுவனங்களின் ஊழியர்களும் வீட்டில் இருந்து பணிபுரிய வேண்டும் எனவும் ஒரு நிலை இருந்து வந்தது.

அதனை பயன்படுத்திக் கொண்ட ஐடி ஊழியர்கள் ஒரே நாளில் இரண்டு நிறுவனங்களில் கூட வேலை பார்க்கும் வழக்கத்தை கொண்டு வந்துள்ளனர். அதனை தடுக்கும் வகையில் இன்போசிஸ் நிறுவனமானது தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் இந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் வேறு ஏதேனும் நிறுவனத்தில் பகுதி நேர வேலையில் ஈடுபட்டது தெரியவந்தான் அவர்களை உடனடியாக வேலையிலிருந்து நீக்கப்படுவார்கள் எனவும் அறிவித்துள்ளது.

 

 

Exit mobile version