Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு:! இனி இதைச் செய்தால் கைது!!

வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு:! இனி இதைச் செய்தால் கைது!!

சென்னையில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாகவும் விபத்துக்கள் மற்றும் விபத்தால் ஏற்படும் உயிர் இழப்புகளை முற்றிலும் குறைக்கும் விதமாகவும்,தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
அதிலும் குறிப்பாக பைக் ரேஸ்களை முற்றிலும் தடுக்க உத்தரவிட்டுள்ளார்.

இருப்பினும் காவல்துறையின் உத்தரவை மீறி மெரினா,கிழக்கு கடற்கரை சாலை,காமராஜர் சாலை,பழைய மகாபலிபுரம் சாலை உட்பட்ட சில பகுதிகளின் சாலைகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பைக் ரேஸ் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த பைக் ரேஸ்களை தடுக்கும் வகையில் சென்னை காவல் கூடுதல் ஆணையர்,கண்ணன் அவர்கள் தனிப்படையை அமைத்துள்ளார்.

மேலும் பைக் ரேஸில் ஈடுபடுவோர்களை கைது செய்து அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.மேலும் மெரினா,காமராஜர் சாலை கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட பல பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.இது மட்டுமின்றி அவ்வப்போது சாலையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் காட்சிகளையும் அவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

 

 

Exit mobile version