வாகனங்களை ஓட்டுபவர்கள் செல்போன்களில் பேசிக்கொண்டு செல்வது குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றினை போக்குவரத்து துறை வெளியிட்டிருக்கிறது. அதன்படி இனி வாகனங்கள் ஓட்டும்பொழுது செல்போனில் பேசிக்கொண்டு சென்றால் அவ்வாறு செய்யக்கூடியவரின் லைசென்ஸ் ஆனது முழுவதுமாக ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
போக்குவரத்து துறையின் கட்டுப்பாடுகள் :-
✓ அதிவேகமாக வாகனங்களை இயக்குதல்
✓ மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்குதல்
✓ வாகனங்களில் செல்லும் பொழுது செல்போன் பயன்படுத்துதல்
✓ சிவப்பு விளக்கு எரியும் பொழுது கடந்து செல்லுதல்
மேலே கூறப்பட்ட இருக்கக்கூடிய விதிகளை மீறுபவர்களுக்கு முதல் முறை அவர்களுடைய லைசென்ஸ் இடைநிறுத்தம் செய்யப்படும் எனவும் மேலும் அதே தவறை மீண்டும் செய்யும்பொழுது முழுவதுமாக லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டு விடும் என்றும் போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆர்டிஓ ஷைலேஷ் திவாரி இதுகுறித்து தெரிவித்திருப்பதாவது :-
புதிதாக லைசென்களை பெற்றுக் கொண்டவர்கள் விதிகளை மீறியதால் அவர்களுடைய லைசென்ஸ் இடைநிறுத்தம் செய்யப்பட்டதாகவும் இடைநிறுத்தம் செய்யப்பட்டதிலிருந்து மூன்று மாத காலத்திற்குள் அவர்களில் பல தங்களுடைய தவறுகளை திருத்திக் கொள்ளவில்லை என்றும் தெரிவித்த இவர் கடந்த ஆண்டு மட்டும் 6761 பேர் ஆபத்தான முறையில் வாகனங்களை இயக்கியதாகவும் தெரிவித்திருக்கிறார்.
மேலும், ஆபத்தான முறையில் வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் கொடுக்கப்படும் என்றும் மது போதையில் வாகனங்களை ஓட்டினால் முதல் முறையிலேயே அவர்களுக்கு லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவித்தவர் தற்பொழுது சலான் வழங்கும் முறையானது பின்பற்றப்பட்டு வருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.