Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு! மூன்று மாதத்திற்கு இங்கு போக்குவரத்து கிடையாது!

Attention motorists! There is no traffic here for three months!

Attention motorists! There is no traffic here for three months!

வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு! மூன்று மாதத்திற்கு இங்கு போக்குவரத்து கிடையாது!

ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.அந்த அறிவிப்பில் சென்னை பூந்தமல்லி டிரங்க் சாலையில் போரூர் முதல் பூந்தமல்லி பைபாஸ் வரை நடைபெறும் சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணி நடைபெற உள்ளது.

அதற்காக தற்போது போக்குவரத்து முறையில் பூந்தமல்லி பைபாஸ் பகுதியில் நேற்று முதல் வரும் பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி வரையில் மூன்று மாதத்திற்கு பகல் மற்றும் இரவு முழுவதுமாக தற்காலிகமாக போக்குவரத்து  மாற்றப்பட்டுள்ளது.

சென்னை -பெங்களூர் நெடுஞ்சாலை ஸ்ரீபெரும்புதூரில் இருந்து சென்னை நோக்கி வரும் வாகனங்கள் பூந்தமல்லிக்கு முன்பாக ,சென்னை வெளிவட்ட சாலை வழியாக இடது புறம் திரும்பி மிஞ்சூர் நோக்கி செல்லும் வாகனங்கள் வழக்கமாக சென்னை வெளிவட்ட சாலையின் சர்வீஸ் ரோட்டில் இடதுபுறம் திரும்பி செல்கின்றன.

அந்த வாகனங்கள் மட்டும் வழக்கமாக இடதுபுறம் திரும்பும் இடத்தில் திரும்பாமல் மெயின் ரோட்டில் சுமார் 200 மீட்டர் தாண்டிச் சென்று இரண்டு வெளிவட்ட சாலை பாலங்களுக்கு இடையில் உள்ள சாலை வழியாக இராது பக்கம் செல்ல வேண்டும்.இவ்வாறு அந்த பகுதிகளில் செல்லும் வாகனங்கள் அனைத்து மூன்று மாதத்திற்கு மாற்றி வேறுபாதையில் செல்லவேண்டும் என அறிவித்துள்ளனர்.

Exit mobile version