வாகன ஓட்டிகள் கவனத்திற்கு! இன்று முதல் இது அமல்! 

0
137
Attention motorists! This is effective from today!

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு! இன்று முதல் இது அமல்!

கொரோனா தொற்றானது மூன்று அலைகளை கடந்து விட்டது. தற்பொழுது நான்காவது அலை தீவிரமாகும் எனக் கூறுகின்றனர். பெற்று பரவல் நாளுக்கு நாள் கணிசமாக உயர்ந்து கொண்டே தான் வருகிறது.இதனையெல்லாம் ஆரம்பத்திலேயே தடுக்க முன்பு பின்பற்றி வந்த கட்டுப்பாடுகளை தற்பொழுது அமல்படுத்தியுள்ளனர். அந்த வகையில் மக்கள் அனைவரும் வெளியே செல்லும்போது கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று கூறியுள்ளனர். அவ்வாறு அணியவிட்டால் ரூ 500 வரை அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

அதேபோல இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது. அவ்வாறு தலைக்கவசம் அணியாமல் போதுமான பாதுகாப்பு கட்டுப்பாடுகளை பின்பற்றாமல் இருப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. அந்த அபராதத்தை உடனடியாக கட்ட முடியாதவர்கள் வட்டார அலுவலகங்களுக்கு சென்று கட்டுவது வழக்கம். அதேபோல ஓட்டுநர் உரிமம் இல்லாமல் இருசக்கர வாகனம் ஓட்டுபவர் மீதும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

பலர் அங்குள்ள போக்குவரத்து அதிகாரியிடம் தனது அபராதத்தை கொடுத்து விடுவர். மேலும் சிலரால் கட்ட முடியாத சூழலில் ஆர்டிஓ அலுவலகத்திற்கு சென்று கட்டுவதும் வழக்கம். சிலர் ஆன்லைனிலும் கட்டி வருகின்றனர். இதற்கெல்லாம் மாற்றாக தற்பொழுது பேடிம் மூலம் அபராதம் கட்டிக் கொள்ளலாம் என சென்னை காவல் ஆணையர் கூறியுள்ளார். அதற்கான கியு ஆர் கோட் அட்டைகளையும் காவல் அதிகாரிகளுக்கு வழங்கினார். இனி சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் பேடிஎம் மூலம் அபராதத்தை செலுத்திக் கொள்ளலாம்.