தேசிய நெடுஞ்சாலை துறை ஒப்பந்ததாரர்களின் கவனத்திற்கு! சி ஏ ஜி வெளியிட்ட அறிவிப்பு!
சிஏஜி அறிக்கை ஒன்றை வெளியிட்டது அந்த அறிக்கையில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறையில் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் என்ஹெச்ஏஐ திட்ட பணிகளில் ஏலம் விடுவதில் ஒப்பந்தத்திற்கு பின்பு திருத்தங்கள் மூலமாக ஒப்பந்ததாரர்களுக்கு தேவையற்ற பலன்கள் அளிப்பதாக உள்ளது.
மேலும் இந்த திட்ட பணிகளை ஏலம் விடும் திறந்த ஒப்பந்தம் நடைமுறையில் ஒப்பந்ததாரர் குறிப்பிடும் பிரீமியம் தொகையை ஒரு அளவாக இருக்கும் நிலையில் நெடுஞ்சாலைத்துறை திட்ட பணிகளில் ஒப்பந்தத்தால் நடைமுறைக்குப் பிறகு ஒப்பந்ததாரர் செலுத்த வேண்டிய பிரீமியம் தொகையின் விவரத்தை தற்போது என்ஹெச்ஏஐ வெளியிட்டுள்ளது எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒப்பந்தத்துக்கு பின்பு எந்த ஒரு திருத்தமும் ஒப்பந்தங்களின் தன்மையை கெடுப்பதாகவும் பிற ஒப்பந்ததாரர்களை ஏமாற்றும் வகையிலும் அமைகிறது எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டு இதுபோன்ற ஒப்பந்தத்திற்கு பிற திருத்தங்களை மேற்கொள்வதை என் எச் ஏ ஐ தவிர்க்க வேண்டும் எனவும் சிஏஜி பரிந்துரை செய்துள்ளது. மேலும் இந்த அறிக்கையில் திட்ட பணிகளில் ஒப்பந்தத்திற்கு பின்பு ஒப்பந்ததாரர்களுக்கு தேவையற்ற பலன்களை அளிக்க வேண்டாம் எனவும் திட்டவட்டமாக கூறப்பட்டுள்ளது.