புதிய ரேஷன் அட்டை அப்ளை செய்பவர்கள் கவனத்திற்கு! இந்த மாவட்டங்களில் மட்டும் இதற்கு தற்காலிக தடை!
திமுக அரசு ஆட்சி அமர்த்துவதற்கு முன்னதாகவே பல 505 அறிக்கைகளை மக்களிடம் கூறியது.தற்போது ஆட்சிக்கு வந்து நான்கு மாதங்கள் ஆன சூழலில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளனர்.அந்த 505 வாக்குறுதிகளில் ஒன்று தான் குடும்ப தலைவிகளுக்கு குடும்ப அட்டையை வைத்து மாதம் தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம்.இந்த திட்டம் இன்றளவும் நடைமுறைக்கு வரவில்லை.இருப்பினும் இந்த அறிவிப்புக்கு பிறகு பல இல்லத்தரசிகள் தங்கள் பெயரில் குடும்ப அட்டையை மாற்ற முயற்சி செய்தனர்.குடும்ப அட்டை இல்லாத பலர் இந்த அறிவிப்புக்கு பிறகு விண்ணப்பிக்க ஆரம்பித்தனர்.ஆனால் தமிழக அரசோ குடும்ப அட்டையில் எந்த பெயரையும் மாற்ற தேவையில்லை.அனைவருக்கும் ரூ.1000 வழங்கப்படும் என கூறினர்.
பலர் அதனையும் மீறி குடும்ப தலைவர் பெயர் இருந்தால் ரூ.1000 கிடைக்காது என்று எண்ணி பெயரை மாற்றினர்.இந்த சூழலில் புதிதாக பிரித்த 9 மாவட்டங்களுக்கு தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.இந்த தேர்தலானது 2 கட்டமாக நடைபெற இருக்கிறது.இதற்கான வேட்புமனு தாக்கலும் முடிந்து வேட்பாளர்களின் பெயர்களும் வெளியிட்டிட்டுவிட்டனர்.அதனால் இந்த மாவட்டங்களில் இதற்கான வேலைகள் அதிகாமா காணப்படுகிறது.
அதனால் புதிதாக ரேஷன்கார்டு அப்ளை செய்தவர்களின் அடுத்த நிலைக்கான பணியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.இந்த தேர்தல் முடிந்த பிறகே மீண்டும் இப்பணிகள் தொடரப்படும் என கூறியுள்ளனர்.அதுமட்டுமின்றி இந்த தற்காலிகமாக நிறுத்தி வைப்பு இந்த 9 மாவட்டங்களில் மட்டும் என்று கூறியுள்ளனர்.அதுமட்டுமின்றி புதிதாக தற்போது பிரித்த மற்ற 4 மாவட்டங்களில் வழக்கம்போல் பணிகள் தொடரும் என்றும் கூறியுள்ளனர்.