பெற்றோர்களே எதிர்வரும் 27ஆம் தேதி இதை செய்ய மறந்து விடாதீர்கள்!

0
110

நோய்த்தொற்று பரவல், முழுமையான ஊரடங்கு, உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்வைத்து கடந்த ஜனவரி மாதம் 23-ஆம் தேதி நடைபெறவிருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைக்கப்பட்டது. எதிர்வரும் 20ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரையில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் 5 வயதிற்குட்பட்ட சுமார் 70 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடுவதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இதற்காக அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள், என்று 43051 பகுதிகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவிருக்கிறது.

பயணம் செய்யும் குழந்தைகளின் வசதிகளுக்காக பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் சோதனை சாவடிகள், உள்ளிட்ட பகுதிகளில் போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொலை தூரம் மற்றும் எளிதில் செல்ல இயலாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்காக நடமாடும் குழுக்கள் உண்டாக்கப்பட்டிருக்கிறது.

சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள் தன்னார்வலர்கள் என 2 லட்சத்திற்கும் அதிகமானோர் சொட்டு மருந்து வழங்கும் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இதன் காரணமாக, பெற்றோர் தங்களுடைய குழந்தைகளுக்கு தவறாமல் போலியோ சொட்டு மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அரசு சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.