Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பெற்றோர்களின் கவனத்திற்கு:! தமிழகத்தில் “பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான தேதி அறிவிப்பு”!

கொரோனாத் தொற்று காரணமாக 2020-2021- ஆம் கல்வியாண்டு இன்னும் தொடங்கப்படவில்லை. இந்நிலையில் பல தனியார் பள்ளிகளில் அரசு அறிவிப்பதற்கு முன்பே மாணவர் சேர்க்கை நடத்தப்படுவதாகவும்,அதற்காக பெற்றோர்களிடமிருந்து அதிக பணம் வசூலிக்கபடுவதாகவும், புகார்கள் எழுந்த நிலையில் கடந்த வாரம்,அரசு,மாணவர் சேர்க்கைக்கான தேதியை அறிவிக்க அவரை தனியார் பள்ளி கல்வி நிறுவனங்கள் மாணவர் சேர்க்கையை நடத்தக்கூடாது என்று தமிழக அரசால் எச்சரிக்கை விடப்பட்டது.

இந்நிலையில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தேதி குறித்து ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளார்.அதில் செங்கோட்டையன் கூறியவாறு ஒன்றாம் வகுப்பு,ஆறாம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்பிற்கான மாணவர் சேர்க்கையும் ஒரு பள்ளியில் இருந்து வேறு பள்ளியில் சேர்வதற்கான சேர்க்கையும் வருகின்ற ஆகஸ்ட் 17-ஆம் தேதி முதல் தொடங்கும் என்று முக்கிய அறிவிப்பை விடுத்துள்ளார்.
மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் நாளன்று, மாணவர்களுக்கான விலையில்லா பாடப்புத்தகம் வழங்கப்பட்டு விடும் என்றும் அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Exit mobile version