Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பென்சன் பெறுபவர்களின் கவனத்திற்கு! இனி ஓய்வூதியத்தை இவ்வாறே பெற்று கொள்ள முடியும்!

Attention pensioners! Now you can get your pension in this way!

Attention pensioners! Now you can get your pension in this way!

பென்சன் பெறுபவர்களின் கவனத்திற்கு! இனி ஓய்வூதியத்தை இவ்வாறே பெற்று கொள்ள முடியும்!

கருவூலம் மற்றும் கனக்குத் துறை ஆணையர் கே.விஜயேந்திர பாண்டியன் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.அந்த உத்தரவில் முன்னதாக ஓய்வூதியம் பெறுபவர்கள் அந்த தொகையை பெற வேண்டும் என்றால் அதற்கு தனி வங்கிக் கணக்கு இல்லாமல் கூட்டு வங்கிக் கணக்கு மூலம் பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதற்கான வழிகாட்டுதல் முறை கருவூல அதிகாரிகள்,உதவி கருவூல அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டிருந்தது.தற்போது வரையிலும் ஓய்வூதியம் பெறுவோரின் துணையுடன் இணைந்து கூட்டு வங்கிகள் கணக்கில் ஓய்வூதியம் வழங்கும் நடைமுறை இருந்து வருகின்றது.

மேலும் கூட்டு வங்கிக் கணக்கு வாயிலாக ஓய்வூதியம் பெறுவதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்து வருகின்றது என ஓய்வூதியதாரர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.தற்போது கருவூலம் மற்றும் கனக்குத் துறையானது கணினிமயமாக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.ஓய்வூதியம் பெறுபவர்கள் கணவன் மனைவியாக இருந்தால் ஒரே கணக்கில் ஓய்வூதியம் வழங்குவதிலும் சிக்கல் உள்ளது.அதனால் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு கூட்டு வங்கி கணக்கு தேவையில்லை என கூட்டு வங்கி திட்டத்தை ரத்து செய்துள்ளனர்.

ஓய்வூதியம் பெறுவதற்கு ஒற்றை வங்கிக் கணக்கு வைத்திருந்தாலே போதும் என உத்தரவிட்டுள்ளனர்.கருவூலத் துறையின் பழைய உத்தரவு காரணமாக ஒற்றை கணக்கு வைத்திருந்தவர்கள் கூட்டு வாங்கி கணக்கிற்கு மாறி கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால் தற்போது பிறப்பித்துள்ள உத்தரவில் ஒற்றை வங்கி கணக்கிலேயே ஓய்வூதியத்தை பெற்று கொள்ள முடியும்.கணவன் மனைவி இருவரும் ஒரே வங்கி கணக்கில் ஓய்வூதியம் பெற்று கொண்டிருந்தால் அவர்கள் அதே கணக்கில் பெற்று கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.

Exit mobile version