மக்களே எச்சரிக்கை.. சொத்து வரிகளுடன் ஆதார் பான் ஜிஎஸ்டி இணைப்பு! விளக்கமளிக்காத தமிழக அரசு!
தமிழக அரசு தற்போது மின் இணைப்புடன் ஆதார் அட்டை இணைக்க வேண்டும் என கூறியதை அடுத்த சொத்து வரிகளுடன் ரேஷன் கார்டு பான் கார்டு ஜிஎஸ்டி முதலானவை இணைக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
ஆனால் இது எதற்காக இணைக்கப்பட வேண்டும் என்பது குறித்து விளக்கம் அளிக்காததால் மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இவ்வாறு தமிழக அரசு விளக்கம் அளிக்காதது குறித்து சமூக ஆர்வலர் சந்தானம் தெரிவித்துள்ளதாவது,
சில நாட்களாக தாமர பகுதியில் ஒரு வார்டுக்கு ஒரு நபர் என்ற கணத்தில் வீடு வீடாக நேரடியாக சென்று சொத்துவரி செலுத்தும் எண்ணுடன் ரேஷன் கார்டு, பான் கார்டு, ஜிஎஸ்டியின் முதலியவை இணைத்து வருவதால் இது எதற்கு என்று தெரியாமல் குடியிருப்போர் நல சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் தமிழக அரசு டெங்கு தடுப்பு பணியாளர்களும் இதேபோல ரேஷன் அட்டை பதிவு செய்து வரும் பட்சத்தில் தற்போது புதிதாக, வரி செலுத்துபவர்கள் பான் கார்டு ரேஷன் கார்டு முதலீட்டவற்றை இணைப்பதால் குழப்பம் அடைந்துள்ளனர்.
இது குறித்த அரசு எந்த விளக்கும் அளிக்காததால் பல இடங்களில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது எனவும் சொத்துவரியுடன் ஆதார் பான் உள்ளிட்டவற்றை இணைக்க மறுப்பது குறித்தும் உயர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளதாக கூறினார்.
நாளடைவில் சொத்து வரி செலுத்துபவர்கள் பான் கார்டு, ரேஷன் கார்டு, ஜிஎஸ்டி இணைப்பு ஏன் என்பது குறித்து தமிழக அரசு விளக்கமளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.