Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மக்களே கவனம்! நாளை முதல் இதற்கு தடை!

நாளை முதல் தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வாகனம் ஓட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், ஊரடங்கை மீண்டும் கடுமையாக்க  மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.அதன்படி, தமிழகத்தில் குறிப்பாக சென்னை, திருவள்ளுவர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவல்  எண்ணிக்கை அதிகரித்து வருவதால்,

ஜூன் 19ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கு அறிவித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இந்த நான்கு மாவட்டங்களில் இந்த முறை ஊரடங்கு கடுமையான முறையில் அமுல்படுத்தப்பட உள்ளது. அதன் ஒரு பகுதியாக வாகனங்களில் செல்ல மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருள்களை வாங்க 2 கிமீ தூரம் வரைதான் செல்ல வேண்டும் எனவும், இருசக்கர வாகனத்தில் கடைக்கு வந்தால் தான் வாகனம் பறிமுதல் செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version