மக்கள் கவனத்திற்கு! இந்த நான்கு நாட்கள் வங்கிகள் இயங்காது!
ரிசர்வ் வங்கி மாதம்தோறும் அடுத்த மாதத்திற்கான விடுமுறை நாட்களில் பட்டியலிட்டு வெளியிடும். அந்த வகையில் அந்தந்த மாநிலத்திற்கு ஏற்ப பண்டிகைகள் கொண்டாடப்படுவதையொட்டி விடுமுறை நாட்கள் அமைந்திருக்கும். அதேபோல் தற்பொழுது ஹோலி பண்டிகை வர உள்ளது. மோடி பண்டிகை வர இருப்பதை தொடர்ந்து மார்ச் மாதத்தில் நான்கு நாட்கள் தொடர்ந்து விடுமுறை அளித்துள்ளனர். அதாவது மார்ச் 17 முதல் தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகள் செயல்படாது. அதனால் மக்கள் தங்கள் வங்கி வேலைகளை முன்கூட்டியே முடித்துக் கொள்ளுமாறு கூறியுள்ளனர்.
வரும் வாரம் 17ம் தேதி 18ஆம் தேதி 19ஆம் தேதி 24 நாட்கள் பண்டிகை விடுமுறை வங்கிகளுக்கு விடு படைத்துள்ளனர். 17-ஆம் தேதி டெக்ராடுன் ,கான்பூர் ,லக்னோ, ராஞ்சி ஆகிய பகுதிகளில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு வங்கிகளுக்கு விடுமுறை. அதற்கு அடுத்த நாளான 18-ஆம் தேதி அகமதாபாத் ஐஸ்வால் கோலாப்பூர் போபால் சண்டிகர் டேராடூன், காங்டாக், குவஹாத்தி, ஹைதராபாத், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர் ,லக்னோ, மும்பை நாக்பூர், டெல்லி ,பனாஜி,பாட்னா ராய்ப்பூர் ராஞ்சி,ஷிலாங் ஸ்ரீநகர் ஆகிய பகுதிகளில் வங்கிகளுக்கு விடுமுறை.
19ஆம் தேதி சனிக்கிழமை அன்று புவனேஸ்வர் , இம்பால் ,பாட்னா ஆகிய பகுதிகளில் விடுமுறை அளித்து உள்ளனர். 20ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆன வங்கி பொது விடுமுறை ஆகும். அந்த ஊரைச் சேர்ந்த மக்கள் தங்களின் வேலைகளை விடுமுறை நாட்களுக்கு முன்னதாகவே செய்து முடித்துக் கொள்ளுமாறு கேட்டு உள்ளனர். மேலும் இந்த வங்கி விடுமுறை நாட்களில் வங்கிகள் மட்டுமே இயங்காது. இதுதவிர ஆன்லைன் வங்கி சேவை மற்றும் ஏடிஎம் சேவை போன்றவை வழக்கம்போல் இயங்கும் என்று கூறியுள்ளனர்.