Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மக்களே எச்சரிக்கை உடனடியாக வங்கியில் உள்ள வேலைகளை முடித்து கொள்ளுங்கள்! 14 நாட்கள் பேங்க் லீவு!

Attention people, finish your jobs in the bank immediately! 14 days bank holiday!

Attention people, finish your jobs in the bank immediately! 14 days bank holiday!

மக்களே எச்சரிக்கை உடனடியாக வங்கியில் உள்ள வேலைகளை முடித்து கொள்ளுங்கள்! 14 நாட்கள் பேங்க் லீவு!

ரிசர்வ் பேங்க் ஆப் நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு ஒவ்வொரு மாதமும் இந்தியா பொது விடுமுறை நாட்கள் அறிவித்து வருகின்றது.அந்த வகையில் ஜனவரி மாதமும் விடுமுறை அளிக்கும்.ரிசர்வ் வங்கியின் விடுமுறை பட்டியல் மூன்று வகைகளாகப் பிரிக்கப்படுகின்றது.அதன் அடிப்படையில் மாநிலம் சார்ந்த பண்டிகைகள்,மாத விடுமுறை மற்றும் பொது பண்டிகைகள் என்ற வகைகளின் கீழ் ரிசர்வ் வங்கி விடுமுறையை அறிவித்து வருகின்றது.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கான விடுமுறை பட்டியல்:

ஜனவரி 1 ஆம் தேதி-ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.

ஜனவரி 2 ஆம் தேதி – மிசோரம் பகுதியில் புத்தாண்டு கொண்டாட்ட விடுமுறை.

ஜனவரி 5 ஆம் தேதி – ஹரியானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் குரு கோவிந்த் சிங் ஜெயந்தி விடுமுறை.

ஜனவரி 8 ஆம் தேதி- ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.

ஜனவரி 11 ஆம் தேதி – மிசோரம் பகுதில் மிஷனரி தின விடுமுறை.

ஜனவரி 14 ஆம் தேதி – பொங்கல் பண்டிகை மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.

ஜனவரி 23  ஆம் தேதி – திரிபுரா மற்றும் மேற்கு வங்காளம் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஜெயந்தி முன்னிட்டு விடுமுறை.

ஜனவரி 25 ஆம் தேதி இமாச்சலப் பிரதேசத்தில் மாநில தினம் விடுமுறை.

ஜனவரி 26 ஆம் தேதி- குடியரசு தின விடுமுறை.

ஜனவரி 28 ஆம் தேதி- நான்காவது  சனிக்கிழமை வங்கி விடுமுறை.

ஜனவரி 29 ஆம் தேதி – ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.

ஜனவரி 31 ஆம் தேதி – அசாமில் மீ டேம்-மீ பை விடுமுறை.

விடுமுறை பட்டியலில் உள்ள நாட்களில் உங்கள் மாநிலம் அல்லது பகுதி சார்ந்த விடுமுறையா என்பதை அனைவரும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.அதுமட்டுமின்றி மேலே குறிப்பிடப்பட்டுள்ள பண்டிகை நாட்கள் மட்டுமின்றி வார இறுதி நாட்களில் வரும் விடுமுறை நாட்களையும் நாம் கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும்.குறிப்பாக விடுமுறை நாட்கள் என்பது ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபடுகிறது என்பதை அனைத்து வங்கி நிறுவனங்களும் ஒரே மாதிரியான விடுமுறையை கடைபிடிப்பதில்லை.

Exit mobile version