பாலிடெக்னிக் மற்றும் பி.எஸ்சி முடித்த மாணவர்கள் கவனத்திற்கு! இன்று முதல் இது தொடக்கம்!
கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளை கடந்துள்ளது.தொற்றின் பாதிப்பு அதிகமாக காணப்பட்டதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுப்பு அளிக்கப்பட்டது.மேலும் மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் பாடங்களை கற்பித்து வந்தனர்.தற்போது தொற்றின் பாதிப்பு குறைய ஆரம்பித்ததால் மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகள் நடைபெற துவங்கியது.பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளிவந்து அனைத்து கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெற்று முடிந்தது.
அதனையடுத்து தற்பொழுது பாலிடெக்னிக் மற்றும் பிஎஸ்சி முடித்த மாணவர்கள் நேரடியாக பொறியியல் இரண்டாம் ஆண்டு படிப்பதற்கு தற்பொழுது மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் தொடங்கியுள்ளது.இதற்கான விண்ணப்ப பதிவானது கடந்த ஆகஸ்ட் மாதம் பத்தாம் தேதி தொடங்கி 30ம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்த பதிவானது ஆன்லைன் மூலம் நடைபெற்றது.பொறியியல் படிப்பிற்கான இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் ,சுயநிதி பொறியியல் கல்லூரிகள் 86 ஆயிரத்து 703 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு 29 ஆயிரத்து 224 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் தகுதியானவர்களாக 25 1783 பேர் உள்ளனர்.இவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஆனது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து கல்வி முதல்வர் மனோன்மணி கூறியதாவது, தொழில்நுட்ப கல்வி துறை இயக்குனரின் வழிகாட்டுதலின் படி பொறியியல் நேரடி இரண்டாம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் ஆனது இன்று அழகப்பா செட்டியார் அரசு பொறியியல் கல்லூரியில் தொடங்கியுள்ளது.இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங் இன்று தொடங்கி அடுத்த மாதம் 11ஆம் தேதி வரை இணையதளம் வாயிலாக நடக்க உள்ளது எனக் கூறினார்.
மாணவர்களின் தரவரிசை நிலை மற்றும் கலந்தாய்வு தேதி போன்றவை www.tnlea.com இன்று இணையத்தில் வாயிலாகவும் பார்த்துக்கொள்ளலாம். அதேபோல தற்போது கொரோனா காலகட்டம் என்பதால் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் கலந்து கொள்ளலாம் என கூறியுள்ளார்.அதுமட்டுமின்றி ஏஐசிடிஇ வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி டிப்ளமோ படிப்பில் எந்த பாடப்பிரிவில் படித்திருந்தாலும் பொறியியல் நேரடி இரண்டாம் ஆண்டு சேரும் பொழுது அவர்கள் விரும்பிய பாடப் பிரிவில் சேர்ந்து கொள்ளலாம் எனக் கூறியுள்ளார்.
அதேபோல மாணவர்கள் தங்களுக்கான விருப்ப பதிவை, பதிவு செய்யும் நாட்களில் அவர்களுக்கு விருப்பமான கல்லூரிகளை லாக் செய்ய வேண்டும். மேலும் தர வரிசைப்படி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கல்லூரிகளை அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நாட்களுக்குள் உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.அதன் இறுதி ஒதுக்கீடு வழங்கப்பட்ட பிறகு அதற்கான ஆணையத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
பிறகு ஒதுக்கப்பட்ட கல்லூரிகளில் அனைத்து அசல் சான்றிதழ்களையும் சமர்ப்பித்து சேர்ந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.இன்று மற்றும் நாளை மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படைவீரர்கள் குழந்தைகள் ,விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கு சிறப்பு கலந்தாய்வும் அத்னையடுத்து 25 ஆம் தேதி முதல் அக்டோபர் 10ஆம் தேதி வரை பொது கலந்தாய்வும் நடத்தப்படுகிறது என தெரிவித்தார்.பிஎஸ்சி முடித்த மாணவர்களுக்கு 11ம் தேதி ஆன்-லைன் மூலம் கலந்தாய்வு நடக்க உள்ளது என தெரிவித்தார்.