கர்ப்பமான பெண்கள் கவனத்திற்கு! உங்கள் உணவில் இது எல்லாம் உள்ளதா? செக் பண்ணிக்கோங்க!!
கர்ப்பமான பெண்கள் தங்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டும். அப்போது தான் பிறக்கும் குழந்தை நல்ல உடல் நலத்துடன் ஆரோக்கியமாக இருக்கும். அதற்கு சில உணவு பழக்கங்களை கட்டாயம் தினமும் சாப்பிட்டால் மிகவும் நல்லது. உங்கள் கருவில் இருக்கும் சின்னஞ்சிறு உயிரை பாதுகாக்க வேண்டியது உங்கள் பொறுப்பு அல்லவா!!!எந்த உணவுகளை உண்ண வேண்டும் எவை நல்லது என்பது பற்றிய போதிய அளவு அடிப்படை விசயங்களை கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்.
1. தண்ணீர்; நாம் தினமும் குடிப்பது தான் என்றாலும் கர்ப்பமான காலத்தில் தவறாமல் சரியான அளவில் குடிக்க வேண்டும். சரியான அளவில் தண்ணீர் குடிப்பது உடல் வறட்சியை தடுப்பதோடு கர்ப்பகால வாந்தி, மயக்கத்தை குறைக்க உதவும். மேலும் சிறுநீர் பாதையில் உருவாகும் தொற்றுக்களை போக்கவும் உதவுகிறது.
2. எலுமிச்சை சாறு;
இதில் விட்டமின் சி இருப்பதால் உங்களுக்கு புத்துணர்வு கொடுக்கும். உடலானது இரும்புச்சத்தை உறிஞ்ச உதவும்.மேலும் கர்ப்ப காலங்களில் வரும் காலை நேரத்தில் வரும் காய்ச்சலைக் குறைக்க உதவும்.
3.இளநீர்;
கட்டாயம் அருந்த வேண்டிய ஒன்றாகும். இதில் பொட்டாசியம் குளோரைடு, மெக்னீசியம் ஆகியவை உள்ளன. இது செரிமானம் ஆகக்கூடிய நார்ச்சத்துக்கள், கால்சியம், மாங்கனீசு உள்ளது.உடல் வறட்சியை தடுப்பதோடு இரத்த அழுத்தம் அதிகரிக்காமல் பாதுகாக்கிறது.
4. மோர்;
பால் பொருளான மோர் கர்ப்பிணிகளுக்கு அவசியமான ஒன்றாகும். கால்சிய ஸ்பாம் சத்து அதிகரிக்க உதவுகிறது. கால்சியம் எலும்பு வளர்ச்சிக்கு , வலுவிற்கு முக்கியமானது.
5. கேரட் ஜூஸ்;
கர்ப்ப காலத்தில் மிகவும் நல்லது. உடல் சோர்வை நீக்கும்.
6. ஆரஞ்சு ஜூஸ்:
வைட்டமின் சி இருப்பதால் குழந்தைக்கு மிகவும் நல்லது.
7.ஆப்பிள் ஜூஸ்:
இது மிகவும் சுவையானதும் ஆரோக்கியமானதும் ஆகும். இதை குடித்தால் களைப்பு தெரியாது.
8. பருப்பு வகைகள்:
அன்றாடம் உண்ணும் போது உடலுக்கு தேவையான புரதம் கிடைக்கிறது.
இவை மட்டும் அல்லாமல் பச்சை காய்கறிகள், கீரைகள், தயிர், பால், பன்னீர், சோயா போன்றவைகளையும் சேர்த்து வந்தால் ஆரோக்கியமான குழந்தை பிறக்கும்…