Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கர்ப்பிணி பெண்களின் கவனத்திற்கு! ஆரோக்கியமான குழந்தை பெற இந்த வகையான உணவுகளை பின்பற்றுங்கள்!

கர்ப்பிணி பெண்களின் கவனத்திற்கு! ஆரோக்கியமான குழந்தை பெற இந்த வகையான உணவுகளை பின்பற்றுங்கள்!

கர்ப்பகாலத்தில் பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகளில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.அந்தவகையில் பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது அவர்களுக்கான ஆரோக்கியமான உணவுகள் எடுத்துக்கொள்வது என்பது மிகவும் அவசியமானது.அதேபோன்று, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை கட்டாயம் தவிர்த்து விட வேண்டும்.

வாழ்வில் பெண்கள் தாயாகி, ஒரு குழந்தையை பெற்றெடுக்க சராசரியாக ஒரு மனிதனுக்கு தேவைப்படும் ஊட்டச்சத்துக்களை விட 350-500 கலோரிகள் அதிகமாக தேவைப்படுகிறது. மேலும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை கட்டாயம் தவிர்த்து விட வேண்டும். மேலும் ஒரே நேரத்தில் அதிகப்படியான உணவு உண்பதை தவிர்த்து, சில மணி நேர இடைவெளி விட்டு உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும்

பச்சை இலை காய்கறிகள் மற்றும் முட்டை கோஸ், கீரை உள்ளிட்ட காய்கறிகளில் இருக்கும் வைட்டமின் ஏ, சி, கே, ஈ, கால்சியம், இரும்பு போன்றவை பிறப்பு குறைபாடுகளை தடுக்க கூடியது.

 

மேலும்

கர்ப்ப காலத்தில் மாமிசம் மற்றும் மீன் போன்ற அசைவ உணவுகளை அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் வைட்டமின் ஏ மற்றும் சி அதிகம் உள்ளது.

 

கர்ப்ப காலத்தில் தானியங்களை உணவாக எடுத்துகொள்வது மிகவும் ஆரோக்கியமானதாகும். உதாரணமாக, பச்சைப் பயிறு, சுண்டல் ஆகியவற்றை ஊற வைத்து முளைக்கட்டிய பயிர்களாக சாப்பிடுவது நல்லது.

 

இலைகளில் கொதிக்க வைத்து டீ மற்றும் க்ரீன் டீ போன்ற மூலிகை டீயை மிதமான சூட்டில் எடுத்து கொள்ள வேண்டும். இவை உடலுக்கு தேவையான எனெர்ஜியை கொடுக்கும். மேலும்

 

கத்தரிக்காய்…குழந்தையின் ஒட்டு மொத்த வளர்ச்சியையும் மேம்படுத்த கூடியது. இருப்பினும், இதை அளவோடு தான் சாப்பிட வேண்டும்.

 

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது, பொதுவாக சர்க்கரை கலந்த உணவையோ, அதிக எண்ணெய் கலந்த பதார்த்தத்தையோ உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். அதேபோன்று, ஒல்லியானவர்கள் எந்த பழங்கள், காய்கறிகளை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், குண்டானவர்கள் அதிக சர்க்கரை உள்ள வாழை, பலா, மாம்பழத்தைக் கட்டாயம் தவிர்த்துவிட வேண்டும். கட்டாயமாக இந்த உணவு முறைகளை பின்பற்றினால் நிச்சயம் ஆரோக்கியமான குழந்தையை பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version