கர்ப்பிணி பெண்களின் கவனத்திற்கு! குழந்தை வளர்ச்சிக்கு இந்த உணவுகளை கட்டாயம் சாப்பிட வேண்டும்!

0
151

கர்ப்பிணி பெண்களின் கவனத்திற்கு! குழந்தை வளர்ச்சிக்கு இந்த உணவுகளை கட்டாயம் சாப்பிட வேண்டும்!

கர்ப்பிணி பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகளைப் பற்றி இந்த பதிவின் மூலமாக காணலாம்.

கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சிக்கு நாம் தினசரி எடுத்துக் கொள்ளும் உணவுகளில் உள்ள சத்துக்களான புரதம், இரும்பு சத்து, கால்சியம், போலிக் ஆசிட், வைட்டமின் பி 12 ஆகிய சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகப்படியாக எடுத்துக் கொள்வதால் வளரும் குழந்தையின் ஆரம்பகால வளர்ச்சிக்கு மிகவும் உதவுகிறது.

புரதம் சார்ந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் முட்டை முதலிடத்தில் உள்ளது. முட்டையில் நல்ல கொழுப்பு, போலிக் ஆசிட் மற்றும் கால்சியம், விட்டமின் டி அதிகப்படியாக நிறைந்துள்ளது. இவை கருவில் வளரும் குழந்தைகளுக்கு மிகவும் அவசியமான சத்துகள்.

கோழி இறைச்சி மற்றும் ஆட்டு இறைச்சிகள் புரதம் அதிகப்படியாகவே நிறைந்துள்ளது. காளான் மற்றும் சோயா பீன்ஸில் அதிகப்படியான புரதங்கள் நிறைந்துள்ளது. இதனை கர்ப்பிணி பெண்கள் சாப்பிடும் உணவுகளுடன் எடுத்துக் கொள்வதன் மூலமாக கருவில் மலரும் குழந்தைகளுக்கு சத்துக்களை அளிக்கிறது.

இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இரும்புச்சத்து நிறைந்துள்ள முதன்மையான உணவு ஈரல் ஆகும். தினமும் 50 கிராம் முதல் 100 கிராம் வரை சாப்பிட்டு வர வேண்டும். பொதுவாக கர்ப்ப காலங்களில் பெண்களுக்கு அடிமையா என்கின்ற ரத்தசோகை ஏற்படுகிறது. உடலில் புதிய ரத்த செல்கள் உருவாவதற்கு முக்கிய காரணமாக இரும்புச் சத்துக்கள் உள்ளது

இதன் விளைவாக இரும்புச் சத்து நிறைந்த ஈரல் எடுத்துக்கொள்ள வேண்டும். முருங்கைக் கீரையில் அதிகப்படியான இரும்புச் சத்துக்கள் நிறைந்துள்ளது. கர்ப்ப காலங்களில் குழந்தைகளுக்கு நாம் கீரை வகைகளை சாப்பிட்டு வர அதிகப்படியான சத்துக்கள் கிடைக்கும்.

முருங்கைக் கீரையில் கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, நார்ச்சத்துக்கள் அதிகப்படியாக நிறைந்துள்ளது. கால்சியம் அதிகம் நிறைந்துள்ள உணவுகளான ஒரு கப் பாலில் 300 மில்லி கிராம் கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. கருவில் வளரக்கூடிய குழந்தைகளுக்கு எலும்பு வளர்ச்சிக்கு கால்சியம் சத்து மிக அவசியமாகும்.

கர்ப்ப காலங்களில் உள்ள பெண்கள் தினமும் மூன்று அல்லது நான்கு லிட்டர் தண்ணீர் பருக வேண்டும். தண்ணீர் சரியான அளவு குடிப்பதன் காரணமாக வாந்தி, தலைவலி இவை அதிகமாக வருவதன் காரணமாக உடலில் நீரின் அளவு குறைகிறது.

இதனை குறைக்க ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு லிட்டர் தண்ணீர் பருக வேண்டும். கேரட் மற்றும் பீட்ரூட்டில் விட்டமின் ஏ அதிகப்படியாக நிறைந்துள்ளது கருவில் வளரக்கூடிய குழந்தைகளின் கண்களுக்கு மிகவும் அவசியமான சத்தாகும். கேரட் மட்டும் பீட்ரூட்டை யூஸ் ஆகவோ அல்லது பொரியல் செய்தோ தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

காலை நேரங்களில் வெறும் வயிற்றில் மாதுளம் பழம் ஜூஸ் அல்லது மாதுளம் பழங்களை சாப்பிட்டு வருவதன் மூலமாக கருவில் வளரும் குழந்தைகளுக்கு சீரான ரத்த ஓட்டம் செல்வதற்கும் உதவுகிறது.