கர்ப்பிணி பெண்கள் கவனத்திற்கு.. இந்த விஷயங்களை கோடை காலத்தில் கட்டாயம் தவிர்க்க வேண்டும்!!

0
180
Attention pregnant women.. These things must be avoided during summer!!

கர்ப்பிணி பெண்கள் கவனத்திற்கு.. இந்த விஷயங்களை கோடை காலத்தில் கட்டாயம் தவிர்க்க வேண்டும்!!

கோடை காலம் தொடங்கி வெயில் கொளுத்தி எடுத்து வருவதால் கர்ப்பிணி பெண்கள் தங்களின் உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும்.கோடை காலத்தில் கர்ப்பிணி பெண்களின் உடல் வழக்கத்தை விட சூடாக இருக்கும்.இதனால் அவர்கள் உடல் உபாதைகளை சந்திக்க நேரிடும்.

கோடை காலத்தில் கர்ப்பிணி பெண்கள் கட்டாயம் செய்ய வேண்டிய விஷயங்கள்:-

1)கர்ப்பிணி பெண்கள் கோடை காலத்தில் வெளியில் செல்வதை தவிர்க்கவும்.ஒருவேளை செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் காலை மற்றும் மாலை நேரத்தில் வெளியில் செல்வது நல்லது.

2)கர்ப்பிணி பெண்கள் உடலில் நீர் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.கோடை காலத்தில் உடலில் உள்ள நீர் வியர்வை வழியாக வெளியேறி உடல் வறட்சியை ஏற்படுத்தி விடும்.எனவே தினமும் 10 கிளாஸ் நீர் அருந்துவதை வழக்கமாக்கி கொள்ளவும்.

3)பாலிஸ்டர் துணிகள்,இறுக்கமான ஆடைகளை அணிவதை தவிர்க்கவும்.காட்டன் துணிகளை அணிவது நல்லது.

4)கர்ப்பிணி பெண்கள் வெளியில் செல்லும் பொழுது தண்ணீர் பாட்டில் எடுத்து செல்வதை வழக்கமாக்கி கொள்ளவும்.

5)அதேபோல் வெளியில் செல்லும் கர்ப்பிணி பெண்கள் தண்ணீர் ஸ்ப்ரேவை கையோடு கொண்டு செல்வது நல்லது.களைப்பு ஏற்பட்டால் தண்ணீர் ஸ்ப்ரே செய்யலாம்.வீட்டில் இருக்கும் கர்ப்பிணி பெண்கள் அடிக்கடி முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

6)கோடை காலத்தில் நீச்சல் பயிற்சி செய்யலாம்.ஆனால் கடுமையான உடற்பயிற்சி செய்வதை தவிர்ப்பது நல்லது.கர்ப்பிணி பெண்கள் மட்டுமல்ல சாதாரண மக்களும் இந்த டிப்ஸை பின்பற்றினால் உடல் உஷ்ணமாவதை தடுக்க முடியும்.