Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கேன்சலான ரேஷன் கார்டை மீண்டும் ஆக்டிவேட் செய்வது எப்படி?

பொது வினியோகத் திட்டத்தின் கீழ் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையினடிப்படையில் அரசு ரேஷன் பொருட்களை வழங்கி வருகிறது. ஆனாலும் கடந்த பல மாதங்களாக ரேஷன் அட்டைகளில் உணவு தானியங்களை வாங்காமல் பலர் இருக்கிறார்கள் அவ்வாறு இருப்பவர்களின் ரேஷன் ரத்து செய்யப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

விதிமுறைகளினடிப்படையில் 6மாதங்களுக்கு ரேஷன் கடைகளில் உணவு தானியங்கள் வாங்கவில்லை என்றால் அவருக்கு மலிவான உணவு தானியங்கள் தேவையில்லை அல்லது அவர் மலிவான உணவு தானியங்களை வாங்க தகுதியற்றவர் என அர்த்தமாகிவிடும்.

மாதம் தோறும் வழங்கப்படும் இந்த வசதியை பலர் பயன்படுத்தாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது ஆகவே 6 மாதங்களுக்கு மேலாக உணவு தானியங்களை வாங்காத ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

மேற்கண்ட காரணங்களால் உங்களுடைய ரேஷன் கார்டு ரத்து செய்யப்பட்டிருந்தால் அதனை நீங்கள் மறுபடியும் செயல்படுத்தலாம் அது எவ்வாறு என்பதை இங்கு நாம் காணலாம்.

முதலில் மாநில அல்லது மத்திய அரசின் AePDS போர்ட்டலுக்கு செல்ல வேண்டும் இப்போது Ration Card Correction என்ற விருப்பத்தில் கிளிக் செய்யவும், ரேஷன் கார்டு திருத்தம் பக்கத்தில் உங்கள் ரேஷன் என்னை கண்டறிய ஒரு படிவத்தை நிரப்ப வேண்டும்.

தற்போது உங்களுடைய ரேஷன் கார்டில் ஏதாவது பிழைகள் இருந்தால் அதனை சரி செய்து கொள்ளலாம் அதன் பிறகு விண்ணப்பத்தை பொது விநியோக அமைப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். உங்கள் ரேஷன் கார்டை செயல்படுத்துவதற்கான விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டால் ரத்து செய்யப்பட்ட ரேஷன் கார்டு மறுபடியும் செயல்படும் என சொல்லப்படுகிறது.

Exit mobile version