ரேஷன் அட்டை தாரர்களின் கவனத்திற்கு! பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து புதிய தகவல்!
தமிழர்களுக்கே உரிய பண்டிகையாக பொங்கல் திருநாளன்று பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும்.அந்த வகையில் கடந்த ஆண்டு மக்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.அப்போது அந்த பொருட்கள் சுகதாரமற்றதாக உள்ளது என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது.அதனை தொடர்ந்து நடப்பாண்டில் பொங்கல் பரிசு தொகுப்பு பற்றி முதல்வர் முக ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
அந்த ஆலோசனை கூட்ட முடிவில் பொங்கல் பரிசு தொகுப்பு ரூ 1000 ரொக்க பணம் மற்றும் சர்க்கரை ,பச்சரிசி வழங்க முடிவு செய்யப்பட்டது.அதனை தொடர்ந்து தற்போது மீண்டும் ஆலோசனை கூட்டம் ஒன்று அமைக்கப்பட்டு அந்த கூட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்க முடிவு செய்துள்ளது.
இதனை தொடர்ந்து ஜனவரி 3ஆம் தேதி முதல் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு பெற டோக்கன் விநியோகம் செய்யப்படும் என அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.இந்த திடீர் தேதி மாற்றமானது விவசாயிகளிடமிருந்து கரும்பு கொள்முதல் செய்ய வேண்டும் என்பதினால் தான் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.