Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிரான கவன ஈர்ப்பு தீர்மானம்! தமிழ்நாட்டை அடுத்து இந்த மாநிலத்திலா? பரபரப்பாகும் சூதாட்ட தடை விவகாரம்! 

#image_title

ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிரான கவன ஈர்ப்பு தீர்மானம்! தமிழ்நாட்டை அடுத்து இந்த மாநிலத்திலா? பரபரப்பாகும் சூதாட்ட தடை விவகாரம்! 

ஆன்லைன் சூதாட்டத்தினால் ஏற்படும் மரணங்களை தடுக்கும் வகையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தை திமுக ஞாயிற்றுக்கிழமை கொண்டு வந்தது. ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் மசோதாவை மாநில ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில் இந்த கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தினால் தொடர்ந்து தற்கொலைகள் நிகழ்வது தொடர்கதை சம்பவமாகி வருகிறது. இதை தடுப்பதற்காக திமுக ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை கவர்னருக்கு அனுப்பியது. ஆனால் கவர்னர் அதை ரத்து செய்து திருப்பி அனுப்பினார். இதனால் ஆன்லைன் சூதாட்டத்தினால் ஏற்படும் தற்கொலை மரணங்களை தடுக்க ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானத்தை திமுக ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்தது.

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரின் கவனத்திற்கு திமுக மக்களவைத் தலைவர் டி.ஆர்.பாலு அழைப்பு விடுத்துள்ளார்.  மேலும் ஆன்லைன் சூதாட்டத்தால் 40க்கும் அதிகமானோர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அவரின் நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தி.மு.க.வும், காங்கிரஸும் இந்த பிரச்சனையை பலமுறை நாடாளுமன்றத்தில் எழுப்பி, 2022 டிசம்பர் 8-ம் தேதி ஆளுநரின் மெத்தனப் போக்கைக் கண்டித்து வெளிநடப்பு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

தற்போது தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டம் தடை மசோதா தாக்கல் செய்யப்படும் சமயத்தில் புதுவையிலும் இது தொடர்பாக கவனம் ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட இருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர்  ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் தொடர்பாக கொண்டுவரப்படும் தீர்மானத்திற்கு அமைச்சர் லட்சுமி நாராயணன் உரிய விளக்கம் அளிக்க இருக்கிறார்.

அதேபோல் கவன ஈர்ப்பு தீர்மானத்தை திமுக சட்டமன்ற குழு தலைவர் சிவா கொண்டு வர இருக்கிறார். தமிழக சட்டசபையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தாக்கல் ஆகும் சூழ்நிலையில் புதுவையிலும் அது தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version