Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மாணவர்களின் கவனத்திற்கு! 2023-24 நீட் தேர்வு ஆன்லைன் விண்ணப்பம்?

Attention students! 2023-24 NEET Exam Online Application!

Attention students! 2023-24 NEET Exam Online Application!

மாணவர்களின் கவனத்திற்கு! 2023-24 நீட் தேர்வு ஆன்லைன் விண்ணப்பம்?

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவலின் காரணமாக மக்கள் அனைவரும் அவர்களின் வீடுகளிலேயே முடங்கி இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். அதனை தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது. மேலும் பொதுத்தேர்வுகள், போட்டி தேர்வுகள் என அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து கடந்து 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைய தொடங்கி மக்கள் அவர்களை இயல்பு நிலைக்கு திரும்பினார்கள். பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் நேரடி வகுப்பு தொடங்கப்பட்டது. கடந்த முறை நீட் தேர்வு நடத்தப்பட்டு தேர்வு முடிவுகளும் வெளியானது. அதன் பிறகு கலந்தாய்வு சுற்றின் மூலம் மாணவர்கள் கல்லூரியை தேர்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் அதேபோன்று அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது அந்த  அறிவிப்பில் இந்தியா முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ படைப்புகளை சேர நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான தனித்தனியே நீட் தேர்வு நடத்தப்படுகிறது.

இந்நிலையில் 2023 24 ஆம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு ஆன்லைன் விண்ணப்பம் குறித்து அறிவிப்பு இன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆன்லைன் விண்ணப்பம் குறித்து அறிவிப்பு https://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் வெளியாகும்.

தமிழ்நாட்டில் 1500 க்கும் மேற்பட்ட எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் இடங்கள் நிரப்பப்பட  உள்ளது. அதனால் தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 1.50 இலட்சம் பேர் விண்ணப்பிக்கலாம். இளங்கலை படிப்புக்கான நீட் தேர்வு வரும் மே மாதம் ஏழாம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version