Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மாணவர்களின் கவனத்திற்கு! நாளை தொடங்கும் 12 ஆம் வகுப்பிற்கான செய்முறை தேர்வு!

Attention students! Class 12 recipe exam starting tomorrow!

Attention students! Class 12 recipe exam starting tomorrow!

மாணவர்களின் கவனத்திற்கு! நாளை தொடங்கும் 12 ஆம் வகுப்பிற்கான செய்முறை தேர்வு!

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்த காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது. மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல்  குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்பு தொடங்கப்பட்டது. மேலும் கடந்த டிசம்பர் மாதம் அரையாண்டு தேர்வு முடிவடைந்த நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து ஜனவரி 2 ஆம் தேதி முதல் அனைவருக்கும் மீண்டும் வகுப்புகள் தொடங்கப்பட்டது.

இந்நிலையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு வரும் மார்ச் மாதம் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 20 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் இந்த தேர்வை சுமார் 26 லட்சம் மாணவர் மாணவிகள் எழுத உள்ளனர். பொதுத்தேர்விற்காக மாணவர்கள் தங்களை தயார் படுத்திக் கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் செய்முறை தேர்வு நாளை அதாவது மார்க் ஒன்றாம் தேதி தொடங்குகின்றது. பொதுத்தேர்வுக்கு கூடுதல் மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தேர்வுத்துறை இதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. தேர்வை கண்காணிக்க மாவட்ட அளவில் கல்வித்துறையில் இருந்து சிறப்பு கூடுதல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version