Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பள்ளி மாணவர்களின் கவனத்திற்கு! அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை நேற்று முன்தினம் வெளியிட்டது. இந்த முறையும் ஆண்களை விட பெண்கள் தான் அதிகளவில் தேர்ச்சி பெற்றிருந்தார்கள்.

இந்த சூழ்நிலையில், 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் இன்று முதல் வரும் 29 ஆம் தேதி வரையில் மறுகூட்டலுக்கு பள்ளிகள் மூலமாக விண்ணப்பிக்கலாம் கூறியிருக்கிறது.

12ம் வகுப்பு துணைத்தேர்வு வருகின்ற ஜூலை மாதம் 27ஆம் தேதி ஆரம்பமாகும்.10ம் வகுப்பு துணைத் தேர்வு ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி ஆரம்பமாகும் என்றும், கூறப்பட்டுள்ளது. 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு எதிர்வரும் 24ஆம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், பள்ளிகள் மூலமாக 24 ஆம் தேதி காலை 11 மணி முதல் மதிப்பெண் சான்றிதழை வாங்கிக்கொள்ளலாம். அதோடு www.dge.tn.nic.in என்ற இணையதளம் மூலமாகவும் இந்த மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version