+12 மாணவர்களின் கவனத்திற்கு!.. துணைத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் இன்று முதல் வெளியீடு!!
தமிழகத்தில் கடந்த மே மாதம் அன்று பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது.12ம் வகுப்பு பொதுத்தேர்வினை 8 லட்சத்து 37ஆயிரத்து 317 பேர் எழுதியுள்ளனர்.தமிழ்நாடு முழுவதும் 140க்கும் மேற்பட்ட மையங்களில் 12ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்றது.
இந்த பணியில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.இந்நிலையில் தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியாகியது. இதில் 93.76 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இதைதொடர்ந்து பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுயிருந்தனர்.
இந்நிலையில் தேர்வில் தோல்வியடைந்தவர்கள் மற்றும் தேர்வை எழுதாத மாணவ மற்றும் மாணவிகளுக்கு துணைத்தேர்வு நடத்தப்பட உள்ளது. அதன்படி பன்னிரண்டாம் வகுப்பு துணைத்தேர்வு ஜூலை 25 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்டு மாதம் 1 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு துணைத்தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை இன்று 20.07.2022 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வுத்துறை அறிவிப்பை வெளியிட்டது.
www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று தங்கள் விவரங்களை பயன்படுத்தி ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.