நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் கவனத்திற்கு! அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிவிப்பு!

0
181
attention-students-who-have-cleared-neet-exam-the-announcement-made-by-minister-ma-subramanian

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் கவனத்திற்கு! அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிவிப்பு!

நேற்று முன்தினம் சென்னையில் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவ படிப்பில் நடப்பாண்டின் கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார்.அப்போது அவர் கூறுகையில் சிறப்பு பிரிவு கலந்தாய்வு நேரடியாகவோ மற்றும் பொதுக் கலந்தாய்வு இணையவழியாகவும் நடைபெற உள்ளது.அரசு மருத்துவக் கல்லூரிகளில் மீதமுள்ள இடங்கள் ,தனியார் கல்லூரிகளில் மாநில அரசு இடங்கள் என மொத்தம் 6067 எம்.பி.பி.எஸ்.இடங்கள் உள்ளன.

மேலும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டுக்காக 1380 பிடிஸ் இடங்கள் உள்ளன. இதுமட்டுமின்றி தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 1,310 எம்.பி.பி.எஸ் இடங்கள் 740 பி.டி.எஸ் இடங்கள் உள்ளன.தற்போது இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகின்றது.இந்நிலையில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகின்றது.

சிறப்புபிரிவு கலந்தாய்வு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நேரடியாகவும் பொது கலந்தாய்வு இணைய வழியாகவும் நடைப்பெறும் .மேலும் விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இன்று நடைபெற உள்ளது.நாளை மறுநாள் முதல் 25ஆம் தேதி வரை இணைய வழியில் பொது கலந்தாய்வு நடைபெற உள்ளது.