Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திரையரங்கு உரிமையாளர்களின் கவனத்திற்கு! உச்சநீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு!

திரையரங்கு உரிமையாளர்களின் கவனத்திற்கு! உச்சநீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு!

ஜம்மு காஷ்மீரில் வழக்கறிஞர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.அந்த மனுவில் திரையரங்குகளுக்கு வரும் பார்வையாளர்கள் வெளியில் இருந்து குளிர்பானங்கள்,தண்ணீர் மற்றும் உணவுப் பொருட்கள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என கூறபட்டிருந்தது.

அந்த மனு தலைமை நீதிபதி சந்திர சூட் மற்றும் நரசிம்மா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் திரையரங்குகளுக்கு வரும் பொது மக்களுக்கு குடிநீர் இலவசமாக வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.திரையரங்கை பொறுத்தவரை அவை முழுவதும் தனியாருக்கு சொந்தமானது. அதனால் அந்த இடத்தில் என்ன விதிமுறைகள் இருக்க வேண்டும் என்பதனை திரையரங்கு உரிமையாளர்கள் மட்டுமே முடிவு செய்ய வேண்டும்.

இதில் நாங்கள் எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என தெரிவித்தனர்.உணவுப் பொருட்கள், குளிர்பானங்கள் போன்றவற்றை மக்கள் எடுத்து செல்வதற்கு தடை விதிக்க திரையரங்கு உரிமையாளர்களுக்கு முழு உரிமையும் உள்ளது.

மேலும் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் உடன் வந்தால் அவர்களின் பெற்றோர்கள் உணவுகளை எடுத்துச் செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Exit mobile version