தவெக மாநாட்டிற்கு செல்வோர் கவனத்திற்கு!! மின் வாரியம் கொடுத்த எச்சரிக்கை!!

0
266
Attention those going to the conference!! The warning given by the electricity board!!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வருகிற ஞாயிற்றுக்கிழமை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி “வி.சாலையில்”   நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு வருபவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டு உள்ளது மின்சாரவாரியம். இந்த மாநாடு 80 ஏக்கர் நிலபரப்பளவு உள்ள திடலில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கான பணிகள் முழு வீச்சில்  நிறைவு பெறும் வகையில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் மின்சார வாரியம் அதிகாரிகள் மாநாட்டு திடலில் ஆய்வு மேற்கொண்டார்கள். இந்த மாநாட்டிற்கு 16000 மின் விளக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. மாநாட்டிற்கு தேவையான அனைத்து மின்சாரமும் ஜெனரேட்டர் மூலம் பெறப்பட உள்ளது. என்பதால்  மின்சார வாரியம் சார்பில் அமைக்கப்பட்ட மின்சார வயர் கேபிள் அகற்றப்பட்டுள்ளது, மேலும் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் இடையூறாக இருந்த மின் கம்பங்களை அப்புறப்படுத்தப்பட்டுள்ளது என்பதை தெரிவித்தனர்.

மேலும் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மின்வாரிய தலைமை பொறியாளர் மணிமேகலை கூறியதாவது, மாநாட்டு திடலுக்கு வெளியே உள்ள பாதையில் மின் கம்பங்களில் மின்சாரம் செல்வதால் மின்வாரிய ஊழியர்கள் அங்கு பணியில் இருப்பார்கள், மேலும் மாநாட்டிற்கு வருபவர்கள்  நீண்ட கம்ப கொடிகளை எடுத்து வர வேண்டாம், வாகனங்கள் மேல் அமர்ந்து வர வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.