திருப்பதி செல்பவர்கள் கவனத்திற்கு இதை தவறவிட்டு விடாதீர்கள்!! கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!!
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர்.இவ்வாறு தரிசனம் புரிய வரும் பகதர்கள் ரயில் பயணத்தையே அதிகம் விரும்புகின்றனர்.போக்குவரத்து நெரிசல் இல்லாத பயணம்,குறைவான கட்டணம்,குடும்பத்துடன் செல்ல ஏதுவான போக்குவரத்து என்பதினால் திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் எப்பொழுதும் கூட்டமாக இருக்கிறது.
இந்நிலையில் திருப்பதி வரும் பக்தர்களுக்கு இந்திய ரயில்வே 5 ஸ்டார் ஓய்வறை ஒன்றை அமைத்திருக்கிறது.ரயில் நிலையத்திற்கு முன்னதாகவே வரும் பக்தர்கள் நீண்ட நேரம் நடைமேடையில் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.இவ்வாறான சூழலில் உணவு,கழிப்பறை உள்ளிட்டவைகளுக்காக மிகுந்த சிரமத்தை சந்திக்க நேரிடுகிறது.
இவ்வாறு நீண்ட நேரம் காத்திருக்கும் பக்தர்கள் இந்திய ரயில்வேயின் 5 ஸ்டார் ஓய்வறையில்
ஓய்வெடுத்துக் கொள்ள முடியும்.ஓய்வெடுக்க நேரத்திற்கு ஏற்றார் போல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.அதன்படி ஒரு மணி நேரத்திற்கு ரூ.50 + GST கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
24 மணி நேரமும் திறந்திருக்கும் இந்த ஓய்வறையில் உணவு,கழிவறை,ஏசி,சோபா, தொலைக்காட்சி பெட்டி,செய்தித்தாள்,இலவச இணைய வசதி உள்ளிட்டவைகள் இருக்கிறது.எனவே திருப்பி வரும் பக்தர்கள் ரயில் நிலையத்தில் உள்ள இந்த 5 ஸ்டார் ஓய்வறையை பயன்படுத்திக் கொள்ள தவறாதீர்கள்.