Indian Railway: ரயில் டிக்கெட் முன்பதிவுக்கான விதிகளை இந்திய ரயில்வே மாற்றியுள்ளது. அது இன்று நவம்பர் 1, 2024 முதல் நடைமுறைக்கு வருகிறது.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரயில் பயணத்தை விரும்புகின்றனர். அதனால் ஒவ்வொரு பயணியின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இந்திய ரயில்வே புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ரயில் முன்பதிவு செய்யும் திட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த புதிய விதிமுறைகளின்படி பயணிகள், இனி எந்த வகையான ரயில்களிலும் 60 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்துகொள்ளலாம். ஏற்கனவே இருந்த முறை, பயணிகள் தங்களின் எதிர்கால பயணத்தின் போது 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும் என்று இருந்தது. அந்த நிலையில் இந்த மாற்றம் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகளை பாதிக்காது என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
இந்த முறையில் முன்பதிவு திட்டத்துக்கு 60 நாட்கள் மட்டுமே உள்ளதால், முன்பதிவு செய்வதில் பயணிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லையெனில் உறுதியான டிக்கெட் பெறுவதற்கு பயணிகளுக்கு கடினமாக இருக்கும் என ரயில்வே துறை கூறியுள்ளது. மேலும் 60 நாட்கள் முடிந்தவுடன் அந்த முன்பதிவு டிக்கெட் ரத்து செய்யப்படும்.
மேலும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு 365 நாட்கள் என்ற அளவில் எந்த மாற்றமும் இல்லை. அதேபோல் ஒரு சில குறிப்பிட்ட பகல் நேர விரைவு ரயில்களான லைம் தாஜ் விரைவு ரயில், கோம்தி முன்பதிவு செய்வதற்கான வரம்பில் எந்த ஒரு மாற்றமும் செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.