ரயிலில் பயணம் செய்பவர்களின் கவனத்திற்கு! கடந்த மாதம் முதல் 1.32 கோடி அபராதம் வசூல்! 

0
170

ரயிலில் பயணம் செய்பவர்களின் கவனத்திற்கு! கடந்த மாதம் முதல் 1.32 கோடி அபராதம் வசூல்!

தற்போதுள்ள சூழலில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டதை அடுத்து அனைவரும் ரயிலில் பயணம் செய்கின்றார்கள். இதனால் பலர் ரயிலில் டிக்கெட் எடுக்காமல் செல்வதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இதனால் அந்த சம்பவத்தை தடுக்கும் வகையில் ரயில்களில் தீவிர சோதனை நடத்தப்பட வேண்டும் என சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

அந்த உத்தரவின் பேரில் பயணச்சீட்டு பரிசோதகர்கள் , ரயில்வே பாதுகாப்பு படையினர் இணைந்து குழு அமைத்து ரயில்வே கோட்டத்தில் உள்ள அனைத்து ரயில்வே நிலையங்களிலும் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையின் அடிப்படையில் எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயிலில் டிக்கெட் பரிசோதனை நடத்தப்பட்டது.

இந்நிலையில் கடந்த மாதம் முதல் இந்த பரிசோதனையில் டிக்கெட் இல்லாதவர்கள் மற்றும் பார்சல் கொண்டு வந்தவர்கள் என 18,860 பேர் சிக்கியுள்ளனர். சிக்கியவர்களின் மீது ரயில்வே சட்டப்படி வழக்கு பதிவு செய்து 1.32 கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சேலம் ரயில்வே கோட்ட முதுநிலை வணிக மேலாளர் ஹரிகிருஷ்ணன் ரயிலில் பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பது தவறு இது தண்டனைக்குரியது அவ்வாறு பயணம் செய்பவர்களிடம் இருந்து இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் ஓராண்டு வரை சிறை தண்டனையும் விதிக்க படலாம் எனவும் கூறியுள்ளார்.