Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திருநங்கைகளின் கவனத்திற்கு! நீங்களும் இதனை பெற வேண்டுமா விண்ணப்பிக்க கடைசி தேதி வெளியீடு!

Attention transsexuals! Last date is published to apply if you want to get this too!

Attention transsexuals! Last date is published to apply if you want to get this too!

திருநங்கைகளின் கவனத்திற்கு! நீங்களும் இதனை பெற வேண்டுமா விண்ணப்பிக்க கடைசி தேதி வெளியீடு!

சென்னை மாவட்ட ஆட்சியர் சு அமிர்தஜோதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிவிப்பில் 2022-23 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருதுக்கு திருநங்கைகளின் முன்னேற்றத்திற்கும், சிறந்த சேவை புரிந்த திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கும் திருநங்கைகள் அரசு உதவி பெறாமல் தானாகவே சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.குறைந்தபட்சம் ஐந்து திருநங்கைகளுக்காவது அவர்கள் வாழ்க்கை முன்னேற்ற உதவி இருக்க வேண்டும். மேலும் திருநங்கைகள் வாரியத்தில் உறுப்பினராக இருக்கக் கூடாது.

அதனைத் தொடர்ந்து விண்ணப்பதாரரின் சுய விவர குறிப்பு, இரண்டு புகைப்படங்கள், சுயசரிதை சேவை குறித்து செயல்முறை விளக்கத்துடன் கூடிய புகைப்படம், சேவையை பாராட்டிய பத்திரிக்கை செய்தி தொகுப்பு, சமூகப் பணியாளர் இருப்பிடத்தின் அருகில் உள்ள காவல் நிலையத்திலிருந்து பெறப்பட்ட குற்றவியல் நடவடிக்கை ஏதும் நிலை என்பதற்கான சான்றுகள் போன்றவற்றை இந்த விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

இந்த விருதுக்கான விண்ணப்பம் விவரங்களை வரும் பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் awards.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version