Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மிக நீண்ட இடைவெளிக்குப் பின்னர் பெட்ரோல் டீசல் விலையில் ஏற்பட்ட மாற்றம்!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் ஏற்ற இறக்கம் ஏற்படுகிறது. இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.

இந்தியாவில் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் ஆக இருந்து வரும் இந்தியன் ஆயில் பாரத், பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து நாள்தோறும் நிர்ணயம் செய்து வருகின்றன.

இந்த சூழ்நிலையில், கடந்த மார்ச் மாதம் முதல் நோய்த்தொற்று அதிகமானதை தொடர்ந்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகப் படுத்தப்பட்டன. இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படாமல் இருந்தது. இந்த நிலையில், ஜூன் மாதம் முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன.

இப்படியான சூழலில், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 12 காசுகள் குறைந்து 99 ரூபாய் 20 காசுக்கும், ஒரு லிட்டர் டீசல் விலை 14 காசுகள் குறைந்து 94 ரூபாய் 14 காசுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது

Exit mobile version