தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு அடுத்த நான்கு நாட்களுக்கு ஏற்படப்போகும் கதி இதுதான்!

0
122

தமிழ்நாட்டில் இன்றைய தினம் திருவண்ணாமலை, திருப்பத்தூர், ஈரோடு, நீலகிரி, திண்டுக்கல், உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

நாளைய தினம் மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், நாமக்கல், திருப்பூர், தேனி, சேலம், உதகை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்வதற்கான வாய்ப்பிருக்கிறது. மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பிருக்கிறது. ஓரிரு பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

நாளை மறுநாள் தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் அநேக பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. நீலகிரி ,கோயம்புத்தூர், திண்டுக்கல், திருப்பூர், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை வரையில் பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

வரும் 29ஆம் தேதி உதகை, கோவை, திண்டுக்கல், தேனி மற்றும் திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்வதற்கான வாய்ப்பிருக்கிறது. தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

சென்னையை பொறுத்த வரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். நகரத்தின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் என்று தெரிவித்திருக்கிறது சென்னை வானிலை ஆய்வு மையம்.